ஆன்லைன் மோசடியில் சிக்கி விட்டீர்களா... நீங்கள் முதலில் செய்ய வேண்டியவை!

Cyber Complaint Online Process: நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ சைபர் குற்றத்தால் (cyber crime) பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் இந்த இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்யுங்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2023, 04:59 PM IST
  • ஆன்லைன் மோசடி வழக்கில் முதலில் செய்ய வேண்டியவை.
  • சைபர் மோசடி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால், அலட்சியமாக இருக்கக்கூடாது.
  • ஆன்லைன் சைபர் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் மோசடியில் சிக்கி  விட்டீர்களா... நீங்கள் முதலில் செய்ய வேண்டியவை! title=

கடந்த பல ஆண்டுகளாக பல மோசடி வழக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.  டிஜிட்டல் பர்வர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளனர். பலர் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறார்கள். ஆன்லைன் மோசடி மற்றும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த செயலியையும் அல்லது பிற தளத்தையும் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது. உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க பல பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்துங்கள். இருப்பினும், eச்சரிக்கை நடவடிக்கை எடுத்த பிறகும், நீங்கள் ஏதேனும் சைபர் மோசடி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் மோசடி வழக்கில் முதலில் செய்ய வேண்டியவை

பணத்தை மாற்றும் போது வேறு கணக்குக்கு பணம் மாற்றப்பட்டது, இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வங்கிக் கணக்கு காலியானது, ஆப்ஸிலிருந்து உங்கள் தரவு திருடப்படுகிறது போன்ற ஏதேனும் ஆன்லைன் மோசடிகளை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் செய்ய வேண்டியது புகாரளிப்பதுதான். சைபர் குற்றம் தொடர்பாக உடனடி தேவை, அது குறித்து புகார் அளித்து பதிவு செய்வது.

சைபர் குற்றத்தை எவ்வாறு புகாரளிப்பது?

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ சைபர் குற்றம் நடந்திருந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்கவும். இதற்கு நீங்கள் சைபர் புகார் எண் 1930 ஐ அழைக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் ஆன்லைன் சைபர் புகாரையும் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?

ஆன்லைன் சைபர் புகார் செயல்முறை

1. முதலில் cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

2. 'Citizen Login' என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இங்கே உள்நுழைக.

3. உங்களிடம் ஏற்கனவே உள்நுழைவு ஐடி இருந்தால், அதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

4. ஐடி இல்லை என்றால், ஐடியை உருவாக்க மாநிலம், உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

5. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

6. அதன் பிறகு கேப்ட்சாவை உள்ளிட்டு submit பொத்தானை அழுத்தவும்.

7. இப்போது இணையதளத்தில் ‘File A Complaint’ என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.

8. இதற்குப் பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விருப்பத்தை ஏற்கவும்.

9. பின்னர், 'Report Under Cyber Crime' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

10. இங்கே 4 பகுதிகளாக ஒரு படிவம் இருக்கும், அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை உள்ளிடவும்.

11. உங்களுக்கு நடந்த சம்பவத்தின் முழு விவரங்களையும், சந்தேக நபர் குறித்த விபரங்களையும் உள்ள புகாரில் குறிப்பிடவும்.

12. எல்லாவற்றையும் மீண்டும் சரிபார்த்து சமர்ப்பி பொத்தானை அழுத்தவும்.

13. இந்த வழியில் நீங்கள் இணையப் புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.

நீங்கள் அதன் PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் அதன் கடின நகலை எடுத்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு நீங்கள் சைபர் போலீஸ் மூலம் தொடர்பு கொள்ளப்படுவீர்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. சம்பள உயர்வு, ரூ.95680 கணக்கில் வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News