சனிப்பெயர்ச்சி 2022: ஏப்ரல் 29 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும்

Sani Peyarchi 2022: சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2022, 11:45 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
  • எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.
சனிப்பெயர்ச்சி 2022: ஏப்ரல் 29 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும்  title=

கும்பத்தில் சனிப்பெயர்ச்சி 2022: சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சனீஸ்வரன் கர்ம பலன்களின் கிரகமான கருதப்படுகிறார். நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி, சனி மகர ராசியை விட்டு வெளியேறி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்குள் சனி பகவான் பிரவேசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனியின் ராசி மாற்றம் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கவுள்ளது. சிலருக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். சனியின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவான் இந்த ராசியின் 11 ஆவது ஸ்தானத்தில் பிரவேசிப்பார். இது லாப ஸ்தானமாகும். சனியின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். 

மேலும் படிக்க | சுக்கிரன் இடமாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக அரசியலில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் தொழிலில் பலமான அனுகூலத்தைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணமே உங்களுக்கு இருக்காது. உங்களது தற்போதையே வேலையிலேயே ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். உங்கள் பணி சிறப்பாக இருக்கும், இது உங்களுக்கு பாராட்டுகளைத் தரும். 

வியாபாரிகள் புதிய வேலையைத் தொடங்கலாம், இது அவர்களுக்கு பல வித நன்மைகளைத் தரும். புதிய தொடர்புகள் மூலம் வணிகத்துக்கான பல புதிய வழிகள் மற்றும் செயல்முறைகள் பற்றி அறிந்துகொள்வீர்கள்.  வருமானத்துக்கான பல வழிகள் பிறக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி அவர்களது வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும். 

சனி கும்ப ராசியில் பிரவேசித்த உடனேயே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும்.

 (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டமான நாள்: ஜோதிட கணிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News