RTO சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முழு சோதனையையும் பயிற்சி மையத்திலேயே முடித்துக்கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 28, 2022, 09:13 AM IST
  • இனி RTOவிடம் வண்டி ஓட்டி காமிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • டிரைவிங் ஸ்கூலில் ஓட்டினால் மட்டும் போதும்.
  • சோதனைகளை சுலபம் ஆக்கியது அரசு.
RTO சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி? title=

வாகனத்தை ஓட்டுவதைவிட அதற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது கடினமான ஒன்றாகும், ஏனெனில் ஓட்டுநர் உரிமத்தை பெற ஆர்டிஓ நடத்தும் சோதனையில் தேர்ச்சி பெற்று அதற்காக காத்திருந்து அதன் பின்னர் உரிமத்தை பெறவேண்டும்.  பலருக்கும் ஓட்டுநர் உரிமம் என்றதுமே அதற்காக அலைந்து திரிவது தான் முதலில் நியாபகத்திற்கு வரும். ஆனால் இனிமேல் அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.  ஏனெனில் இப்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது.  தற்போதுள்ள புதிய விதியின்படி, பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முழு சோதனையையும் பயிற்சி மையத்திலேயே முடித்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்

இதனை செய்ய உங்கள் பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பள்ளிகளை நீங்கள் முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.  அந்த ஓட்டுனர் பள்ளியில் சேர்ந்து நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், ஓட்டுநர் பள்ளி உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை வழங்க வேண்டும்.  இந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் உங்களுக்கு 8 மணிநேர கோட்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும், பயிற்சிக்கு பிறகு சான்றிதழில் உங்கள் சாலை நடத்தை, போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவு, முதலுதவி பயிற்சி மற்றும் பயிற்சியின் போது ஓட்டப்படும் மொத்த கிலோமீட்டர்கள் போன்ற பல முக்கியமான விவரங்கள் இடம்பெறும்.

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், ஓட்டுநர் சான்றிதழுடன் பெர்மிட் பேப்பர்களையும் சேர்த்து உங்கள் உள்ளூர் ஆர்டிஓவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதன் பிறகு உங்களுக்கு எவ்வித சோதனையும்  இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.  இந்த முறையின் மூலம் உள்ளூர் ஆர்டிஓக்களின் வருகையும்,  அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் இருக்கும் அழுத்தமும் குறைந்துவிடும்.  அதுமட்டுமல்லாது ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்காக நீங்கள் நீண்ட நேரத்திற்கு வரிசைகளில் காத்திருந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவையும் இருக்காது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கிய முக்கிய செய்தி, கட்டாயம் படிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News