இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஆதார் கார்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது ஒருவரின் அடையாள ஆவணமாக மாறி உள்ளது. அதே போல 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்ட் போன்றவற்றையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தனிநபர்கள் 18 வயது நிரம்பியவுடன் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது பல இடங்களில் பான் கார்ட் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பயன்படுவதை தாண்டி, வங்கிகளில் KYC சமர்பிப்பதற்கான ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் ஆதாருடன் பான் கார்ட் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இதன் தேவை அதிகரித்துள்ளது.
18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும் இல்லாமல் சிறுவர்களுக்கும் பான் கார்டு பெற்று கொள்ள முடியும். ஆனால் அவற்றை அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது. ஏனெனில், சிறார்களுக்கு வழங்கப்படும் பான் கார்டில் அவர்களின் புகைப்படம் அல்லது கையொப்பம் இடம் பெறாது. குழந்தைகளின் பெற்றோர்கள் பெயரில் அவை இணைக்கப்படும். குழந்தைகளுக்கு 18 வயது ஆரம்பித்தவுடன் பான் கார்டை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு பான் கார்டு எதற்காக தேவை?
முதலீட்டு நோக்கங்களுக்காக பான் கார்ட் தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அதற்கு பான் கார்டு அவசியம் தேவை. அதே போல உங்களின் முதலீடுகளுக்கு உங்கள் குழந்தையை நாமினியாக மாற்ற விரும்பினால் அதற்கும் பான் கார்ட் முக்கிய ஆவணமாக தேவைப்படுகிறது. தற்போது பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு வங்கி கணக்கு திறக்க சொல்கின்றனர். அப்போது பான் கார்ட் தேவைப்படலாம். மேலும் குழந்தைகளுக்கு வருமான வரும் ஆதாரம் இருந்தால் பான் கார்ட் அவசியம் தேவை.
குழந்தைகள் பெயரில் பான் கார்ட் பெறுவது எப்படி?
குழந்தைகள் பெயரில் பான் கார்ட் பெற முதலில் NSDL இணையதளத்திற்கு சென்று படிவம் 49A ஐப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு, அதில் உள்ள தகவல்களை முறையாக படித்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டு இருக்கும் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். அதனுடன் குழந்தையின் வயது சான்றிதழ், தேவையான ஆவணங்கள், பெற்றோரின் புகைப்படம் போன்றவற்றை இணைக்க வேண்டும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்ய பிறகு, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த செயல்முறை முடிந்த பிறகு உங்களது பான் கார்ட் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும். 10 முதல் 15 நாட்களுக்குள் பான் கார்டை பெற்று கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள் என்ன?
குழந்தைகள் பெயரில் பான் கார்ட் பெற பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று கண்டிப்பாக தேவை. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம். முகவரி சான்றுக்கு ஆதார் அட்டை, தபால் அலுவலக பாஸ்புக், சொத்து பதிவு ஆவணங்கள், வீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ