Amazon Great Republic Day Sale: குடியரசு தின விற்பனையில் 70% டிஸ்கவுண்ட் தரும் அமேசான்

Amazon Sale 2023: அமேசான் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க உள்ளது... ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி... டிவிகளுக்கு 65% தள்ளுபடி... கொண்டாட்டம் தான்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 07:36 PM IST
  • அமேசான் குடியரசு தின விற்பனை சூப்பர் ஆஃபர்
  • ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி!
  • டிவிகளுக்கு 65% தள்ளுபடி
Amazon Great Republic Day Sale: குடியரசு தின விற்பனையில் 70% டிஸ்கவுண்ட் தரும் அமேசான் title=

நியூடெல்லி: அமேசான் குடியரசு தின விற்பனை விரைவில் தொடங்க உள்ளது... ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி... டிவிகளுக்கு 65% தள்ளுபடி... கொண்டாட்டம் தான்... இந்த ஆண்டு, அமேசான் பயனர்கள் வருடாந்திர குடியரசு தின விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவி உபகரணங்கள் மற்றும் பிற பாகங்கள் மீது பெரும் தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

அமேசான் விற்பனை மற்றும் சலுகைகள் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேரம் முன்னதாகவே தொடங்கும் என்பதால், சந்தாதாரர்கள் ஜனவரி 16 முதல் இந்த மெகா விற்பனையில் இருந்து பொருட்களை வாங்க முடியும். 

அமேசான் விற்பனை 2023

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் என்பது ஜனவரி மாதத்தில் வரும் அமேசான் தள்ளுபடி விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஜனவரி 19 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், முன்னதாகவே தொடங்கவிருக்கிறது. ஈ-காமர்ஸ் மேஜரான அமேசான் நிறுவனத்தின் குடியரசு தின விற்பனை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 17க்கே தொடங்கி, ஜனவரி 20 அன்று முடிவடையும்.

மேலும் படிக்க | 2023இல் இந்தியாவை மிரட்ட இருக்கும் மின்சார கார்கள்... இனி இதுக்குதான் மவுஸ்!

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2023 பிரைம் உறுப்பினர்களுக்கான தேதிகள்
அமேசான் விற்பனை மற்றும் சலுகைகள் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும் என்பதால், சந்தாதாரர்கள் ஜனவரி 16 முதல் வரவிருக்கும் விற்பனையில் பொருட்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை சலுகைகள்
இந்த ஆண்டு, அமேசான் பயனர்கள் வருடாந்திர குடியரசு தின விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டிவி உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு, வழக்கத்தை விட பெரும் தள்ளுபடி கிடைக்கும்.

வரவிருக்கும் விற்பனையின் ஸ்னீக் பீக்கைப் பகிர்ந்து கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமானது, மொபைல் போன்களில் 40% தள்ளுபடியும், டிவி உபகரணங்களுக்கு 65% தள்ளுபடியும், அமேசான் பிராண்டுகளில் 70% வரை தள்ளுபடியும் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த குடியரசு தின விற்பனையின் போது பிரச்சாரங்கள் மற்றும் சலுகைகளில் 'பிளாக்பஸ்டர் டீல்கள்', 'பட்ஜெட் பஜார்', 'ப்ரீ-புக்கிங்', 'இரவு 8 டீல்கள்' மற்றும் 60+ புதிய அறிமுகங்கள் இருக்கும் என்று அமேசான் இண்டியா தெரிவித்துள்ளது.

அமேசான் குடியரசு தின விற்பனை: மொபைல், ஸ்மார்ட்போன் டீல்கள்
தற்போதைய நிலவரப்படி, மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள் மீது 40% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று இ-காமர்ஸ் மேஜர் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு iPhone 14, Oneplus Nord CT, realme narzo 50, realme narzo 50 plus மற்றும் பல பிராண்டுகளில் சூப்பர் டிஸ்கவுண்ட் கிடைக்கும். OnePlus, Samsung, Realme, Xiaomi, Vivo, Oppo மற்றும் பிற பிராண்டுகளும் சலுகை விலையில் கிடைக்கும்.

மேலும் படிக்க | ரூ 699 ரீசார்ஜ் பிளான்..130 நாட்கள் வேலிடிட்டி..பிஎஸ்என்எல் அசத்தல்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2023 கார்டு தள்ளுபடி

எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையை வழங்கும் அமேசான், வரவிருக்கும் விற்பனையில் "SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் 10% உடனடி தள்ளுபடியை" வழங்குகிறது.  E-காமர்ஸ் நிறுவனம் அமேசான் மற்றும் SBI வங்கியின் இந்த விற்பனைச் சலுகை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

அமேசான் விற்பனைக்கான ஆரம்ப அணுகல்
இலவச மற்றும் விரைவான டெலிவரியுடன், அமேசான் பிரைம் உறுப்பினர்கள், குடியரசு தின விற்பனை 2023இல் பொது விற்பனைக்கு ஒரு நாள் முன்னதாக பொருட்களை வாங்கலாம். பிரைம் மெம்பர்ஷிப் அமேசானின் ஆரம்பகால அணுகல் நன்மையின் பலன்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆரம்ப அணுகல் பலனைப் பெற, பயனர்கள் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு பதிவு செய்ய வேண்டும், இது இந்தியாவில் மாதத்திற்கு ரூ.179க்கு கிடைக்கிறது.

அமேசான் கடைசி விற்பனை
சமீபத்தில், அமேசான் தனது பிரைம் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமான 'பிரைம் போன் பார்ட்டி' விற்பனையை நடத்தியது. விற்பனை ஜனவரி 8, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த மொபைல் போன் விற்பனையில், இ-காமர்ஸ் நிறுவனமானது OnePlus, Samsung, Realme, Xiaomi, Vivo, Oppo, Tecno மற்றும் பல சிறந்த பிராண்டுகளுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கியது.

அமேசானின் குடியரசு தின விற்பனை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, அமேசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

மேலும் படிக்க | Amazon Sale 2023; 40% ஆஃபரில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!!.. அமேசான் அசத்தல் ஆஃபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News