இந்தியாவின் வாரன் பஃபெட் என்று பிரபலமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நம்மிடையே இல்லை என்றாலும், பங்கு சந்தையில் அவரது அரசாட்சியும், முதலீடு செய்யும் கடைபிடிக்கும் உத்தியும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும், கடைபிடிப்படும் ஒன்றாக உள்ளது என்றால் மிகையில்லை. அவரது முதலீடுகள் சந்தையின் இயக்கத்தை தீர்மானிப்பதாக இருந்தன. அவர் முதலீடு செய்த நிறுவனப் பங்குகள் ஏறிக்கொண்டே இருந்தன. முதலீடு தொடர்பாக மக்களுக்கு அவர் பல ஆலோசனைகளை வழங்கினார். அதை பினபற்றிய லட்சக்கணக்கானோர் இன்று பணக்காரர்களாக மாறியுள்ளனர். அவரின் வெற்றி மந்திரத்தை தெரிந்து கொள்வோம். பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதனை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலில் மிகக் குறைந்த அளவிலான பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். ஆனால், ஆயிரத்தை கோடிகளாக்கிய அவரது முதலீடுகள் மூலம் தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்தார். கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும் இடம்பிடிக்கத் தொடங்கினார்.
மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பின்பற்றிய உத்திகள்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் மிகவும் கவனமாக முதலீடு செய்தார். அவர் தனது பணத்தை வீணாக்காமல், திறமையாக பங்கு சந்தையில் முதலீடு செய்து, அதன் மூலம் அவர் கோடிக்கணக்கான செல்வத்தை சம்பாதித்தார். மறுபுறம், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்களுக்கு பல சிறப்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார், அதை பின் பற்றுதன் மூலம் சாதாரண முதலீட்டாளரும் ஒரு மில்லியனராக மாறலாம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டு டிப்ஸ் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்
இந்தியாவின் வாரன் பஃபே என்று குறிப்பிடப்படும் ஜுன்ஜுன்வாலா எப்போதும் நீண்ட கால முதலீடு என அறிவுறுத்தி வந்தார். பங்கு சந்தையில் தொடர்ந்து நீடித்து இருக்க விரும்பினால், நீண்ட காலம் முதலீடு செய்யுங்கள் என்று சொல்வார். குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதை விட, முதலீடு பன்மடங்கு வளர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவார். சந்தையில் பணம் பலகி பெருக சிறிது நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். சந்தையில் கொஞ்சம் காத்திருந்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடம் ஜுன்ஜுன்வாலா கூறி வந்தார்.
நிறுவனத்தின் கடனையும் பார்க்கவும்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தில் எவ்வளவு கடன் இருக்கிறது என்று பார்ப்பது வழக்கம். பணத்தை முதலீடு செய்யும் முன் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் கடனைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கும் அதே அறிவுரையை வழங்குவார். கடன் குறைவாக இருந்தால், நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. ஆனால், கடன் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் மதிப்பீடு எந்த நேரத்திலும் குறையும் வாய்ப்பு உள்ளது எனக் கூறுவார்.
மேலும் படிக்க | Rupee Vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
மதிப்பில் கவனம் செலுத்துங்கள், விலையில் அல்ல
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நிறுவனத்தின் பங்குகளின் விலையைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறுவார். அதிக விலையுள்ள பங்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பது அவசியமில்லை. நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் மதிப்பு மற்றும் செயல் திறனை பார்க்கவும், அதன் பங்கு விலையை அல்ல எனக் கூறுவார். பெரும்பாலும் மக்கள் அதிக விலையுள்ள பங்குகளை வாங்கி தவறு செய்கிறார்கள். இதை ஒருபோதும் செய்யக்கூடாது.
மற்றவர்கள் விற்கும்போது வாங்கவும், மற்றவர்கள் வாங்கும்போது விற்கவும்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எப்போதும் காற்று வீசும் திசைக்கு எதிராக செல்வது அபலன் அளிக்கும் என நம்பினார். பெரும்பாலானோர் பங்குகளை விற்கும் போது வாங்குங்கள், பிறர் வாங்கும் போது விற்றுவிடுங்கள்” என்று சொல்லுவார். இதனால் அவர் மக்களின் கூட்ட மனப்பான்மைக்கு எதிராக இருந்தார். மேலும் சந்தை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது மற்றவர்களைப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது அல்ல என்றார். இங்கே வருமானம் அதிக அளவில் இருக்கும். அதனால் ஆபத்தும் அதிகம். எனவே, மற்றவர்களைப் பார்த்து முதலீடு செய்யாமல், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன் பிறகே முதலீடு செய்ய வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பணத்தை முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SBI பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் பணம் பன்மடங்காக பெருகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ