Monthly Horoscope: தை மாதம் உங்கள் ராசிக்கு தித்திக்குமா? திகட்டுமா? தை மாத ராசிபலன்!

இந்த ஆண்டும் பொங்கல் முதல் மாறும் கிரக நிலைகள் பலருக்கு நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றன. அனைத்து ராசிகளுக்கும் தை மாதத்திற்கான ராசிபலனை இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 06:23 AM IST
  • தை மாதம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான தருணங்களைக் கொண்டு வரப் போகிறது.
  • கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொடர்ந்து உங்கள் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டிய மாதமாகும்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு தை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
Monthly Horoscope: தை மாதம் உங்கள் ராசிக்கு தித்திக்குமா? திகட்டுமா? தை மாத ராசிபலன்!  title=

Monthly Horoscope: இன்று தைத்திங்கள் முதல் நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறுவதுண்டு. அவ்வகையில், தை மாதம் பிறந்து சூரிய பகவானின் நிலைகளும் மாறுவதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் (Zodiac Signs) பாதிக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நாட்களாக பிரச்சனையை சந்தித்துக்கொண்டிருந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. இந்த ஆண்டும் பொங்கல் முதல் மாறும் கிரக நிலைகள் பலருக்கு நல்ல பலன்களைக் கொண்டு வருகின்றன. அனைத்து ராசிகளுக்கும் தை மாதத்திற்கான ராசிபலனை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): தை மாதம் உங்கள் வாழ்வில் பொன்னான தருணங்களைக் கொண்டு வரப் போகிறது. புத்திசாலித்தனத்துடன் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல நேரம். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நிகழும். தேவை இல்லாத நினைவுகளை மறந்து புதிய பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். 

ரிஷபம் (Taurus): சில பழக்கங்களை மேம்படுத்திக்கொண்டால், இந்த மாதம் உங்களுக்கு அட்டகாசமாக இருக்கும். பழைய முதலீடுகளின் மூலம் கிடைத்த பணத்தால் உங்கள் நிதி நிலை வலுப்பெறும். இறைவனை வழிபடுவதில் மன உறுதி ஏற்படும். இல்லற வாழ்வில் அன்புடனும் புரிதலுடனும் இருப்பீர்கள். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் இருந்த மந்த நிலை நீங்கி உங்கள் திறமை வெளிப்பட பல வாய்ப்புகள் கிடைக்கும். 

மிதுனம் (Gemini): இந்த மாத தொடக்கத்தில் சற்று மந்தமான நிலை இருக்கும். எனினும், மாதம் செல்லச்செல்ல பல முன்னேற்றங்கள் ஏற்படும். மிதுன ராசிக்காரர்களுக்கு (Gemini) நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் மொத்த வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை வாங்கி சேர்த்து வக்கக்கூடாது. கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். ஆரோக்கியத்தில் அக்க்கறை தேவை. 

கடகம் (Cancer): இந்த மாதம் தொடர்ந்து உங்கள் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டிய மாதமாகும். எழுத்தாளர்கள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கவும். பெற்றோர் கூறும் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொலைதூர இடங்களிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

ALSO READ | Pongal 2022 ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுளின் செல்வம் தங்கும், வளமும் மகிழ்ச்சியும் பொங்கும்

சிம்மம் (Leo): உங்கள் எண்ணங்களில் மாற்றம் காண்பீர்கள். தொழில் திட்டங்களை உற்சாகமாக முடிப்பீர்கள். பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இளைஞர்கள் தொழிலில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவார்கள். தடைபட்ட திருணம் நடக்கும்.  குழப்பத்தில் இருந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பாதை கிடைக்கும்.

கன்னி (Virgo): சில புதிய மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலையில் கொஞ்சம் முதிர்ச்சியையும் தீவிரத்தையும் காட்டுங்கள். வேலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

துலாம் (Libra): தை மாதம் உங்கள் ஆற்றலும், திறமையும் உலகுக்கு தெரியப்போகும் மாதம். உங்கள் திறமையை நிரூபிக்க உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், அதில் இப்போது உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

விருச்சிகம் (Scorpio): விருச்சிக (Scorpio) ராசிக்காரர்களுக்கு தை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணம் சம்பந்தமாக மனதில் பலவிதமான எண்ணங்கள் வரலாம். வியாபாரத்தை அதிகரிக்க புதிய வழிகளை யோசிப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு சாதகமான மாதமாக இது இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். அனைத்து சவால்களையும் இந்த மாதம் மிக லாவகமாக கையாண்டு வெற்றிகரமாக பணிகளை செய்து முடிப்பீர்கள்.

தனுசு (Sagittarius): தற்போது பிறந்துள்ள தை மாதத்தில் உங்கள் பேச்சு உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஆடை வியாபாரிகளுக்கு சில ஏமாற்றங்கள் வரலாம். விரைவான லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான வழிகளைக் கையாளாதீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும். பெண்கள் மூலம் வீட்டில் நல்ல சூழல் நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நல்ல செய்தி கிடைக்கும். 

மகரம்  (Capricorn):கடந்த கால வியாபார விவகாரங்களில் தீர்வு காண தை மாதம் சிறந்த மாதமாக இருக்கும். நீங்கள் சில புதிய நபர்களை சந்திப்பீர்கள். இந்த சந்திப்புகள் உங்களுக்கு நன்மை பயக்கும். புதிய வீடு, மனை வாங்கும் கனவு பலிக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும்.

கும்பம் (Aquarius): உங்களது நேரம் தை மாதத்தில் மிகவும் நன்றாக உள்ளது. வருமானத்தில் ஏற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் உங்கள் நிதி நிலை மேம்படும். அவசர வேலைகளின் வருகையால், திட்டமிடப்பட்ட திட்டங்களில் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்திடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

மீனம் (Pisces): குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பொது இடங்களில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பணியிடத்தில், உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். மீன ராசிக்காரர்கள் (Pisces) நிதி நெருக்கடியைத் தவிர்க்க, வீண் செலவுகளை நிறுத்த வேண்டும். வம்பு செய்பவர்களிடம் மோதல் வேண்டாம், அமைதியாக பேசி புரியவைக்க முயற்சிக்க வேண்டும். சூரியனின் இட மாற்றத்தால், இந்த மாதம் முதல் உங்களுக்கு பல சாதகமான பலன்கள் கிடைக்கத் துவங்கும். 

ALSO READ | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள்: அசத்தலாய் வாழ்க்கை நடத்தும் ஜாலி பேர்வழிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News