EPFO முக்கிய செய்தி: இபிஎஃப்ஒ-விலிருந்து இபிஎஃப்ஓ டிரஸ்டுக்கு கணக்கை மாற்றுவது எப்படி?

EPF Account: இரண்டு நிறுவனங்களும் (பழைய மற்றும் புதிய) பொதுவான இடைமுகம் மூலம் பரிமாற்றங்களைத் தொடங்க முடிந்தால், இபிஎஃப் கணக்குகளை ஆன்லைனில் மாற்றுவது சாத்தியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 12:48 PM IST
EPFO முக்கிய செய்தி: இபிஎஃப்ஒ-விலிருந்து இபிஎஃப்ஓ டிரஸ்டுக்கு கணக்கை மாற்றுவது எப்படி?  title=

வருங்கால வைப்பு நிதி சமீபத்திய புதுப்பிப்பு: ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் பிஎஃப் சந்தாதாரர், தனது பணியை வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றினால், அவர் தனது வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கை முந்தைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், புதிய நிறுவனம் முந்தைய நிறுவனத்தைப் போலன்றி, இபிஎஃப் பணத்தை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) டெபாசிட் செய்வதற்குப் பதிலாக, இபிஎஃப் வருமானத்திற்கன ஒரு தனியார் அறக்கட்டளையை இயக்கினால் என்ன செய்வது?

அப்படிப்பட்ட சூழ்நிலையில், பணியாளர் என்ன செய்ய வேண்டும்? ஊழியர்கள் பழைய இபிஎஃப் கணக்கிலிருந்து புதிய இபிஎஃப் கணக்கிற்கு மாற்ற முடியுமா? இபிஎஃப்ஓ-விலிருந்து தனியார் இபிஎஃப் அறக்கட்டளைக்கு தொகையை மாற்றுவது சாத்தியமா? 

சாத்தியமே!! இபிஎஃப்ஓ-வின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, இபிஎஃப் சந்தாதாரர் மாறும் புதிய நிறுவனம் இபிஎஃப் தொகையை இபிஎஃப்ஓ-வில் டெபாசிட் செய்தாலும், வேறு ஒரு அறக்கட்டளையில் டெபாசிட் செய்தாலும், அவர் இபிஎஃப் கணக்கை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். முன்னர் இருந்த நிறுவனத்தின் கணக்கோ, அல்லது புதிதாக செல்லும் நிறுவன கணக்கோ, இபிஎஃப்ஓ-வில் இருந்தாலும், அல்லது வேறு ஒரு டிரஸ்டில் இருந்தாலும், இந்த செயல்முறையில் எந்த பிரச்சனையும் வராது. 

குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு நிறுவனங்களும் (பழைய மற்றும் புதிய) பொதுவான இடைமுகம் மூலம் பரிமாற்றங்களைத் தொடங்க முடிந்தால், இபிஎஃப் கணக்குகளை ஆன்லைனில் மாற்றுவது சாத்தியமாகும். 

பரிமாற்ற நடைமுறையைத் தொடங்குவதற்கு முன், தனிநபர்கள் அல்லது ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கு KYC-க்கு இணக்கமாக இருப்பதையும், அவர்களின் யுஏஎன் (UAN) அவர்களின் ஆதார் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ளதையும், அவர்களின் இபிஎஃப் கணக்குடன் தொடர்புடைய மொபைல் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | பம்பர் வருமானத்துக்கு நல்ல வாய்ப்பு: எல்ஐசி-க்கு பிறகு வருகிறது இந்த சூப்பர் ஐபிஓ 

இபிஎஃப் கணக்கை இபிஎஃப்ஓ-விலிருந்து நிறுவனத்தின் டிரஸ்டுக்கு மாற்றுவது எப்படி என இங்கே காணலாம்: 

- உறுப்பினர் சேவா தளத்தில் உங்கள் கணக்கை அணுக உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

- லாக் இன் செய்த பிறகு, ‘ஆன்லைன் சேவைகள்’-க்குச் சென்று, ‘ஒன் மெம்பர்-ஒனெ இபிஎஃப் அகவுண்ட் (டிரான்ஸ்ஃபர் ரெக்வஸ்ட்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- ஒரு புதிய சாளரம் திறக்கும். நீங்கள் பணத்தை மாற்ற விரும்பும் புதிய இபிஎஃப் கணக்கின் விவரங்கள் இங்கே காட்டப்படும்.

- பின்னர், உங்கள் புதிய இபிஎஃப் கணக்கு எண்ணை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.

- உங்கள் ஆன்லைன் பரிமாற்றத்தை உங்கள் தற்போதைய நிறுவனம் அங்கீகரிக்குமா அல்லது முந்தைய நிறுவனம் அங்கீகரிக்குமா என நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 

- இபிஎஃப் கணக்குப் பரிமாற்றச் சான்றளிப்புக்கு புதிய நிறுவனத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதை உங்களின் தற்போதைய நிறுவனத்திடமிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வெண்டும்.

- உங்களின் முன்னாள் மற்றும் புதிய நிறுவனங்களின் UANகள் ஒரே மாதிரியாக இருந்தால் உங்கள் உறுப்பினர் ஐடியை (முந்தைய இபிஎஃப் கணக்கு எண்) உள்ளிடவும். அவை வேறுபட்டிருந்தால், உங்கள் பழைய நிறுவனத்தின் UAN-ஐ உள்ளிடவும். 

- நீங்கள் ‘கெட் டீடைல்ஸ்’ என்பதைக் கிளிக் செய்தவுடன், ​​உங்கள் இபிஎஃப் கணக்கின் விவரங்கள் காட்டப்படும்.

- நிதி மாற்றப்படும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

- ‘கெட் ஓடிபி’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி டெலிவரி செய்யப்படும்.

- ஓடிபி- ஐ உள்ளிடவும். உங்கள் பரிமாற்ற கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission ஊழியர்களுக்கு ஹோலி பரிசு: ஊதியத்தில் பம்பர் உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News