தேவ குருவான வியாழன் இன்று காலை 6.41 மணிக்கு கிழக்கு திசையில் உதயமாகியுள்ளார். பிப்ரவரி 23 அன்று வியாழன் மேற்கு திசையில் அஸ்தமானார். வியாழனின் அஸ்தமன காலத்தில், திருமணம், நிச்சயதார்த்தம், மொட்டை அடித்தல், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பல சுப காரியங்களை மக்கள் பொதுவாக செய்வதில்லை.
எனினும், தற்போது வியாழன் உதயமாகியுள்ளதால் அனைத்து ராசிக்காரர்களும் சுப பலன்களை பெறுவார்கள் என்பது உறுதி.
குரு பகவான் அறிவை ஆளும் கிரகமாக இருப்பதால், மனிதர்களின் ஞானம், புத்திசாலித்தனம், அறிவு ஆகியவை அதிகரித்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க சூழல் உருவாகும். வியாழன் தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
வெவ்வேறு ராசிகளில் வியாழன் உதயத்தின் பலன் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்:
மேஷம்: வருமானமும், மகிழ்ச்சியும், மரியாதையும் அதிகரிக்கும். செலவுகள் குறையும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் வரத் தொடங்கும்.
ரிஷபம்: வாழ்வாதாரம் வலுவாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
மிதுனம்: அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். தடைபட்ட பணிகள் வேகம் பெறும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: எட்டாம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பது பிரச்சனைகளில் இருந்து காக்கும். அதிக விவேகத்துடன், நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
சிம்மம்: உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்லுறவு இருக்கும். குடும்பத்தில் அன்பு வளரும். சொத்துக்கள் வாங்கும் சூழல் உருவாகும்.
மேலும் படிக்க | Astro: புத ஆதித்ய யோகத்தினால் பிரகாசிக்க போகும் ‘5’ ராசிகள்..!!
கன்னி: நோய்கள், எதிரிகள் தொல்லை குறையும். நிதி நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சியையும் மரியாதையையும் பெறுவீர்கள். தைரியம் அதிகரிக்கும்.
துலாம்: கல்வித்துறையில் சாதனைகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கடி நீங்கும். நண்பர்களுடன் அன்பு அதிகரிக்கும். பணம் வரும்
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிதி நெருக்கடி நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு: இந்த காலத்தில் அதிக வாய்ப்புகளை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும்.
மகரம்: பேச்சால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்: உடல் நோய்கள் விலகும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பெற்றோர்களின் உதவியால் காரியம் முடிவடையும். நம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்: செலவுகள் குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும். நிதி நெருக்கடி இருக்காது. மீன ராசிக்கார்ரகளின் பொருளாதார நிலை மேம்படும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR