BHEL-ல் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.71,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு!

பொறியியல் பட்டதாரிகளுக்கு BHEL நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.71,000 வரை சம்பளத்தோடு பணியமர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2022, 03:06 PM IST
  • BHEL நிறுவனத்தின் சிவில்(civil) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்த பணிக்கான விண்ணப்பம் செயல்முறையை இந்நிறுவனம் கடந்த 2021 டிசம்பர்-30ம் தேதி முதலே தொடங்கிவிட்டது.
BHEL-ல் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.71,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு! title=

அரசு சார்ந்த வேலைகளை தேடிக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அசத்தலான ஒரு வாய்ப்பை BHEL நிறுவனம் வழங்கியுள்ளது.  BHEL( Bharath Heavy Electricals Limited) நிறுவனத்தின் சிவில்(civil) பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப, பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் BHEL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான pswr.bhel.com - அல்லது careers.bhel.in -ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை ஜனவரி22,2022-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.  மேலும் விண்ணப்ப படிவத்தின் நகல் மற்றும் இதர முக்கியமான சான்றுகளை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 15,2022 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களின் சம்பளத்தில் அதிரடி உயர்வு

இந்த பணிக்கான விண்ணப்பம் செயல்முறையை இந்நிறுவனம் கடந்த 2021 டிசம்பர்-30ம் தேதி முதலே தொடங்கிவிட்டது.  இதன் மூலம் 10 பொறியாளர்கள் மற்றும் 26 மேற்பார்வையாளர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  மேற்பார்வையாளர் பதவிக்கு மாதந்தோறும் ரூ.39,970 வரை சம்பளமும், பொறியாளர்களுக்கு ரூ.71,040 வரை சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

bhem

இதில் பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை  சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்திருந்தால் போதுமானது.  மேலும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  BHEL நிறுவனத்தின் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  விண்ணப்ப கட்டணம் ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | PPF: மாதம் 500 ரூபாய் முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் சேர்ந்தால் கோடீஸ்வரராகலாம்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News