போதையில் குத்தாட்டம் போட்ட மாப்பிள்ளை; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

திருமணத்தில் மாப்பிள்ளையே குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

Last Updated : Nov 11, 2019, 06:10 PM IST
போதையில் குத்தாட்டம் போட்ட மாப்பிள்ளை; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! title=

திருமணத்தில் மாப்பிள்ளையே குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

திருமண வீட்டில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மாப்பிள்ளையை மணப்பெண் திருமணம் செய்ய மாட்டேன் என திருமணத்தை நிறுத்திய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பெராலி மாவட்டம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண விழாவின் போது மணமக்கள் ஜோடியாக ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். ஊர்வலம் முடிந்ததும் மாப்பிள்ளையின் தோழர்கள் மாப்பிள்ளையை ஊர்வல வாகனத்திலிருந்து இறக்கி குத்தாட்டம் போட வைத்தனர். முதலில் யோசித்த மாப்பிள்ளை பின்னர் தன் நண்பர்கள் வற்புறுத்தியதால் குத்தாட்டம் போட்டார். 

அப்பொழுது அவரை ஆட்டம்போடுவதில் இருந்து நிறுத்த பெண் வீட்டார் சில முயன்றதாகவும், ஆனால் அவர்களை மாப்பிள்ளை அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் ஒரு வழியாக வழிக்கு வந்த மாப்பிள்ளை அடுத்த கட்ட நிகழ்விற்காகச் சென்றார். அங்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றும் நிச்சிய தாம்பூல நிகழ்ச்சி எல்லாம் நடந்தன. அதன் பின் மாப்பிள்ளையின் தோழர்கள் மீண்டும் அவரை டான்ஸ் ஆட வர வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் போய் நாகினி டான்ஸ் ஆடினார். அப்பொழுது அவர் குடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைப் பார்த்துக் கோபமடைந்த மணப்பெண் தனக்கு இவருடன் திருமணமே வேண்டாம் எனத் திருமண மண்டபத்தை விட்டுச் சென்று விட்டார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் மாப்பிள்ளையும் அவரது நண்பர்களும் மணப்பெண்ணிடம் பேசினார். ஆனாலும் மணப்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் இரு தரப்பினரும் புகார் தர விரும்பாததால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை நிறுத்தினர். 

 

Trending News