Austria-வில் உள்ளது அமர்நாத் போன்ற பனியாலான சிவலிங்கம்: தரிசனம் பெற குவியும் பக்தர்கள்

நம் நாட்டில் உள்ள அமர்நாத் சிவாலிங்கத்தைப் போலவே, உலகின் மற்றொரு பகுதியில் பனியால் இயற்கை சிவலிங்கத்தை உருவாக்குகிறது என்பது பலருக்குத் தெரியாது. இதைக் காண உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 03:10 PM IST
  • அமர்நாத் லிங்கத்தைப் போலவே மற்றொரு நாட்டிலும் பனியாலான சிவலிங்கம்.
  • சிவலிங்க தரிசனத்துக்காக பலர் தினமும் வருகின்றனர்.
  • இந்த குகை கோயிலில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
Austria-வில் உள்ளது அமர்நாத் போன்ற பனியாலான சிவலிங்கம்: தரிசனம் பெற குவியும் பக்தர்கள்  title=

இந்தியாவில் பல சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில், 12 ஜோதிர்லிங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்து மத நம்பிக்கைகளின்படி, சிவன் இந்த 12 ஜோதிர்லிங்கங்களில் ஜோதிர்லிங்க வடிவத்தில் அமர்ந்திருக்கிறார்.

இவற்றுடன் அமர்நாத் குகைக்கோயிலும் நம் நாட்டில் மிகவும் பிரபலமானதொரு ஆன்மீகத் தலமாகும். அங்கு பனி இயற்கையான சிவலிங்கத்தை உருவாக்குகிறது.

நம் நாட்டில் உள்ள அமர்நாத் சிவாலிங்கத்தைப் போலவே, உலகின் மற்றொரு பகுதியில் பனியால் இயற்கை சிவலிங்கத்தை உருவாக்குகிறது என்பது பலருக்குத் தெரியாது. இதைக் காண உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். 

ஆஸ்திரியாவின் (Austria) சால்ஸ்பர்க் நகருக்கு அருகில் வார்ஃபெனில் 40 கி.மீ நீளமுள்ள பனி குகை உள்ளது. இது இயற்கையாகவே சிவலிங்கம் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது. விசேஷம் என்னவென்றால், இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் அமர்நாத் குகையில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் வடிவத்தை விட மிகப் பெரியது. இந்த சிவலிங்கம் வர்ஃபென் குகையில் அமைந்துள்ளது. 

ALSO READ: Devotional: வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?

இந்த குகையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சிவலிங்கத்தின் (Shivalinga) அருகில் உள்ள இடம் வரை எளிதாக செல்ல முடிகிறது. இந்த சிவலிங்கத்தின் உயரம் சுமார் 75 அடியாகும். குகைக்குள் செல்ல மக்கள் ஆபத்தான பாதைகளைக் கடந்து செல்ல வேண்டும். இங்கே சிவலிங்கத்தைப் பார்க்கும் காலம் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை தொடர்கிறது.

வார்ஃபெனின் குகை உலகின் மிக நீளமான பனி குகை ஆகும். இது 1879 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சிவலிங்கம் போல தோற்றமளிக்கும் பல வடிவங்களைக் காண முடிகிறது. 

இந்த பனி குகை மே முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும். இங்கே கோடை மாதங்களில் கூட குளிர் இருக்கிறது. இந்த குகைக்கு வந்தால், நீங்கள் வேறு உலகத்திற்கு வந்திருப்பதைப் போல உணர்வீர்கள். அண்டம் முழுவதும் சிவனின் (Lord Shiva) அம்சம் என்பதற்கு இதை விட ஒரு பெரிய சான்று இருக்க முடியாது!!

ALSO READ: எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News