நல்ல திருமண வாழ்க்கைக்கு பல விஷயங்கள் துணை நிற்கும். சண்டைகளை தவிர்க்க, வீண் விவாதங்கள் எழாமல் இருக்க கண்டிப்பாக பல விஷயங்களை உங்கள் வாழ்க்கை துணையிடம் பேசியே ஆக வேண்டும். ஆனாலும், அவர்களிடம் பேசக்கூடாத சில விஷங்கள் இருக்கின்றன. அதில், உங்கள் திருமணத்தைப் பற்றி வருத்தம் தெரிவிப்பது, வாழ்க்கை துணையை பிறரிடம் ஒப்பிடுவது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் வேறு என்னென்னவற்றை பேச கூடாது? இதோ பார்க்கலாம்.
1.திருமணம் குறித்த வருத்தம்...
உங்கள் திருமணத்தைப் பற்றி வருத்தம் தெரிவிப்பது உங்களது வாழ்க்கை துணையின் மனதை புண்படுத்தும். இது திருமண வாழ்க்கையில் உள்ள நம்பிக்கையின் அடித்தளத்தை சிதைக்கிறது. இதை தவிர்த்து உங்கள் உறவில் காதலை எப்படி வளர்ப்பது என்று யோசிக்க வேண்டும். திருமண வாழ்வில் ஏற்படும் சவால்கள் மற்றும் உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய பல வழிகள் இருக்கின்றன.
2.பெற்றோருடன் ஒப்பிடுதல்..
உங்களது வாழ்க்கை துணையுடன் அவர்களது பெற்றோரை ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது, பல விதமான எதிர்மறை தாக்கங்களை உங்களது திருமண வாழ்வில் ஏற்படுத்தும். இது, அவர்களின் மனதினை புண்படுத்தவும் செய்யலாம். மேலும், அவர்களுக்கு உங்களது உறவு குறித்த பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும். இதை தவிர்த்து, அவர்கள் செய்யும் விஷயங்கள் எதுவும் பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவரிடம் தன்மையான விதத்தில் தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க | இண்டிகோ பயணிகள் கவனத்திற்கு... இனி குளிர்பானம் இலவசம்... ஆனால் ஒரு நிபந்தனை!
3.காதல் வரவில்லை என்று கூறுவது...
காதல் வாழ்க்கையோ அல்லது திருமண வாழ்க்கையோ அதில் ஆரம்பத்தில் இருக்கும் காதல் இறுதிவரை இருக்குமா என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக திருமண வாழ்வின் காதல் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இதனால், உங்கள் வாழ்க்கை துணையிடம் சென்று “உன் மீது எனக்கு காதல் வரவில்லை” அல்லது “உன் மீது காதல் இல்லை..” என்று கூறுவதை தவிர்க்க வேண்டும். அந்த காதலை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இதற்காக கவுன்சிலிங் உள்ளிட்ட பல வழிகள் இருக்கின்றன. அதை தேர்ந்தெடுக்கவும்.
4.குழந்தை வளர்ப்பை குறை கூறுவது..
குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர் இருவருக்குமே பொதுவானது. ஆனால், சமூகத்தில் குழந்தைகளை பெண்தான் வளர்க்க வேண்டும் என்ற பாணியில் பார்த்து வருகின்றனர். இந்த நிலை மாற, கணவன்மார்களும் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அந்த தப்பிற்கு “உன் வளர்ப்புதான் காரணம்..” என்று ஒரு பெற்றோர் இன்னொருவரை பார்த்து கூறக்கூடாது. இது உங்களது திருமண வாழ்க்கையை சிதைத்து விடும்.
5.ரகசியங்களை பாதுகாப்பது...
ரகசியங்கள், என்பது தனி நபரின் உரிமை. ஆனால், திருமண உறவு என்று வந்துவிட்டால் அதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். ரகசியங்களை பாதுகாக்க பலருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். இதை ஒரு கட்டத்தில் உங்களது வாழ்க்கை துணையிடம் கூறும் போது அந்த ரகசியத்தை ஏன் இத்தனை நாட்களாக கூறவில்லை என்பதற்கு சரியான காரணத்தை சொல்ல வேண்டும். இது, உங்கள் திருமண வாழ்வை சீர்குலைத்து விடும் என்று நீங்கள் கருதினால், அந்த ரகசியத்தை கூறாமல் இருப்பதே நல்லது.
மேலும் படிக்க | அதிகரிக்கும் மோசடி... போலி கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்க உள்ள RBI!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ