Diwali Bonus: ஊழியர்களின் தீபாவளி போனஸ் குறித்த முக்கிய தகவல்!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தீபாவளியை ஒட்டி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2021, 12:59 PM IST
Diwali Bonus: ஊழியர்களின் தீபாவளி போனஸ் குறித்த முக்கிய தகவல்!!  title=

Central Government Employees Bonus: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தீபாவளியை ஒட்டி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு சமமாக நான்-ப்ரொடெக்டிவிடி லிங்க்ட் போனஸ் (AdhocBonus) வழங்குவதற்கான திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த தீபாவளியில் மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி முன்பை விட அதிக பிரகாசமாக இருக்கும்.

இந்த அறிவிப்பின் பலன் மத்திய அரசின் (Central Government) குருப் சி மற்றும் குருப் பி- யின் அனைத்து கெஜட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் கிடைக்கும். உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் திட்டத்தின் கீழ் வராத ஊழியர்கள் இதன் பலனை பெறுவார்கள். 

நிதி அமைச்சகம் தகவலை அளித்தது

நிதி அமைச்சகம் இந்த தகவலை அளித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, 'இந்த உத்தரவின் கீழ், மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் அட்ஹாக் போனஸின் நன்மை கிடைக்கும். இது தவிர, மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் மற்றும் மற்ற போனஸ் செயல்முறையின் கீழ் வராத யூனியன் பிரதேசங்களின் ஊழியர்களும் இந்த சலுகையைப் பெறுவார்கள்.

போனஸ் தொகையின் கணக்கீடு

31-3-2021 அன்று சேவையில் இருந்த மற்றும் 2020-21 வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியான சேவையை வழங்கிய ஊழியர்களுக்கு மட்டுமே அட்ஹாக் போனஸின் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தொடர்ச்சியான சேவை காலத்திற்கு விகிதாசாரமாக ஊதியம் (Salary) வழங்கப்படும்.

ALSO READ: New Wage Code:ஊதியம், விடுமுறைகள், வேலை நேரம் அனைத்திலும் பெரிய மாற்றம் 

முழுமையான கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம்

அட்ஹாக் போனஸின் தொகையின் சராசரி, அதன் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் தொகையின் உச்சவரம்பு, இதில் எது குறைவோ, அதன் அடிப்படையில் செய்யப்படுகின்றது. உதாரணமாக, நீங்கள் ஒரு நாளின் அட்ஹாக் போனஸைக் கணக்கிட விரும்பினால், ஒரு வருடத்தின் சராசரி ஊதியங்கள் 30.4 ஆல் வகுக்கப்படும் (ஒரு மாதத்தில் சராசரி நாட்களின் எண்ணிக்கை). அதன் பிறகு, போனஸ் (Bonus) வழங்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கையால் அது பெருக்கப்படும்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்:

ரூ.7000-க்கு (உண்மையான சராசரி ஊதியங்கள் ரூ .7000 க்கும் அதிகமாக இருந்தால்) மாதாந்திர ஊதியங்களின் கணக்கீட்டை இந்த வழியில் செய்யலாம்.

அதாவது, 30 நாட்கள் மாதாந்திர போனஸ்: 7000 × 30/30.4 = ரூ. 6907.89

போனஸ் பெற தகுதி பெற்றவர்கள் யார்

ஒவ்வொரு வருடமும் குறைந்தது 240 நாட்கள் அல்லது 3 வருடங்கள் அல்லது அதற்கு மேல் 6 வாரங்களுக்கு கீழ் அலுவலகங்களில் பணிபுரிந்த சாதாரண தொழிலாளர்கள், (3 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு 5 நாட்கள் வேலை செய்யும் அலுவலகங்களில், ஒவ்வொரு ஆண்டும் 206 நாட்கள்) இந்த PLB அல்லாத தொகைக்கு தகுதி பெறுவார்கள். இவர்களுக்கான அட்ஹாக் போனஸின் அளவு - 1200 × 30/30.4 = ரூ 1184.21 ஆகும்.

ஊதியம் மாதத்திற்கு ரூ .1200 க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த தொகை உண்மையான மாத ஊதியங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

ALSO READ: 7th Pay Commission: பம்பர் ஊதிய உயர்வு, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News