கணவருக்கு உங்கள் மீது அதிக காதல் இருந்தால் ‘இங்கு’ முத்தம் கொடுப்பாராம்! எங்கு தெரியுமா?

Kiss And Their Meanings : காதலரோ, கணவரோ, அவருக்கு உங்கள் மீது அதிக காதல் இருந்தால் எங்கெல்லாம் முத்தம் கொடுப்பார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2024, 04:39 PM IST
  • காதலர்களுக்குள் பரிமாறப்படும் முத்தங்கள்!
  • எந்த முத்தத்திற்கு என்ன அர்த்தம்?
  • அனைத்திற்கும் அர்த்தம் இங்கே!!
கணவருக்கு உங்கள் மீது அதிக காதல் இருந்தால் ‘இங்கு’ முத்தம் கொடுப்பாராம்! எங்கு தெரியுமா?  title=

Kiss And Their Meanings : முத்தங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர் முத்தமிடுவது வேறு, ஒரு காதலன், தனது காதலிக்கு கொடுக்கும் முத்தம் வேறு, தாத்தா-பாட்டி, தனது பேரன் பேத்தியை வாரி அணைத்து முத்தமிடுவது வேறு. இவை அனைத்திலும் மாறாமல் இருக்கும் ஒரே அர்த்தம் என்ன தெரியுமா? பாசம் மட்டுமே. இவற்றை பலர் முத்தங்களின் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். உங்கள் காதலர்/கணவருக்கு உங்கள் மீது அதிக காதல் இருந்தால் எங்கெல்லாம் உங்களை முத்தமிடுவார் தெரியுமா? 

உதட்டு முத்தம்:

பலர், வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் உதட்டோடு உதடு, 1 விநாடி முத்தம் வைத்து கிளம்புவர். இது மிகவும் விரைவானதாக இருந்தாலும், இதுவும், ஒரு வகையான அன்பை காட்டும் முத்தம்தான். இது காதலையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையிலான முத்தமாகும்.

உணர்ச்சிமிக்க முத்தம்:

இந்த முத்தம் இன்னும் அதிகமான உணர்ச்சிகளையும், ஆழமான உணர்வுகளையும் வெளிக்கொணரும் வகையில் இருக்கும். உதட்டோடு உதடு மட்டும் இல்லாமல், அதில் நாக்கும் உபயோகப்படுத்தப்பட்டால் உங்கள் பார்ட்னர் உங்கள் மீது உடல் அளவிலும் மனதளவிலும் அதிகமாக ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம். அது மட்டுமன்றி, ஆழமான நெருக்கத்திற்கான ஆசையை வெளிப்படுத்தும் முத்தமாகவும் அது இருக்கும். 

நெற்றியில் முத்தம்: 

நெற்றியில் முத்தம் கொடுப்பதற்கு காதலை தாண்டி பெரிய அளவிலான அர்த்தம் இருக்கிறது. அன்பு, அக்கறை, பாதுகாப்பு உணர்வு, ஆழமான உணர்ச்சிகள் போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் இந்த முத்தம். காதலர் அல்லது கணவர் இந்த முத்தம் கொடுப்பது அவர் உங்கள் நலனை அதிக அளவில் விரும்புகிறார் என்பதற்கு அர்த்தமாகும். 

கன்னத்தில் முத்தம்: 

கன்னத்தில் முத்தமிடுவது அரவணைப்பு மற்றும் பாசத்திற்கான குறியீடாகும். இது, கணவர், மனைவிக்கு கொடுக்கும் முத்தமாக இருக்கலாம், இரு தோழிகள் அல்லது தோழர்கள் நட்பு ரீதியாக கொடுத்துக்கொள்ளும் முத்தமாக இருக்கலாம். பாரட்டை தெரிவிக்க, பாசத்தை வெளிப்படுத்த, காதல் ஆர்வத்தை வெளிப்படுத்த இந்த முத்தத்தை உங்கள் பார்ட்னர் கொடுக்கலாம்.

மூக்குடன் மூக்கு முத்தம்:

இந்த முத்தத்தில் உதடுகளுக்கு வேலையே இல்லை, காதலர்கள் மட்டும்தான் இந்த முத்தத்தை கொடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. மூக்குடன் மூக்கை வைத்து இடித்து கொள்ளும் இந்த முத்தத்தை ஆங்கிலத்தில் Eskimo Kiss என்று அழைக்கின்றனர். இருவருக்குள் இருக்கும் நெருங்கிய பிணைப்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நகைச்சுவையான முத்தம் இது. 

Kiss

பிரஞ்சு முத்தம்:

வாயை திறந்து, உதடுகளை தாண்டி நாக்கை வைத்து கொடுக்கும் இந்த முத்தத்திற்கு பெயர்தான் French Kiss. உடலுறவுக்கு முன்னர், உடல் ரீதியாக நெருங்குவதற்கு முன்னர் பலர் இந்த முத்தங்களை பரிமாறிக்கொள்வர். 

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன்பு பெண்கள் சருமத்தை இந்த வழியில் கவனித்துக் கொள்ள வேண்டும்!

பட்டாம்பூச்சி முத்தம்: 

இது மிகவும் விளையாட்டான மற்றும் பாசமான முத்தமாகும். பார்ட்னரின் சருமத்திற்கு மேல், கண் இமைகளை வைத்து படபடத்தால், அதுதான் பட்டாம்பூச்சி முத்தம். இது அவருக்கு உங்கள் மீது பாசம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் லேசான முத்தம் ஆகும்.

கழுத்தில் முத்தம்: 

கழுத்தில் முத்தம் கொடுப்பது என்பது, சிற்றின்பத்தை தேடும் முத்தமாக அறியப்படுகிறது. காதலும் காமமும் அதிகமாக இருக்கும்போது, இன்னும் கொஞ்சம் நெருக்கம் வேண்டும் என்பதை காண்பிக்க, உங்கள் பார்ட்னர் இந்த முத்தத்தை உங்களுக்கு கொடுக்கலாம், அல்லது நீங்கள் அவருக்கு கொடுக்கலாம். கவர்ச்சியான முத்தங்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. 

மேலும் படிக்க | காலையில் இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News