அன்பே வாழ்க்கை: தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல... கோழைத்தனம்

தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல... அது ஒரு தண்டனை... கோழைத்தனம் என ஜீ நியூஸ் ஆசிரியர் தயாசங்கர் மிஸ்ரா கூறியுள்ளார்.

Written by - Dayashankar Mishra | Last Updated : Jul 16, 2018, 08:33 PM IST
அன்பே வாழ்க்கை: தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல... கோழைத்தனம் title=
தற்கொலை. இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை, இந்த நெருக்கடி மிக உயர்ந்த தீவிரத்துடன் பரவி வருகிறது. ஒரு காலத்தில் நாட்டில் நிதி ஆதாரமில்லாமலும், வாழ வழி இல்லாமலும் தற்கொலைகள் செய்துக்கொண்டனர். விவசாயிகளும் இதே நிலையில் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், வேகமாக தொழில்நுட்பம், கேஜெட்டுகள் மற்றும் உலகில் பேசுவதற்கான வசதியும் அதிகரித்துள்ள நிலையில், வாழ்க்கையிலும் இரக்கமற்ற தன்மையும் அதிகரித்துள்ளது.
 
இந்தியாவின் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ள, கொஞ்சம் அமெரிக்காவின் பக்கம் செல்லலாம். ஏனென்றால, நமது கலாச்சாரமும், அமெரிக்காவின் கலாச்சாரமும் மிக நெருக்கமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான 45,000 பொதுமக்கள் தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துக்கொள்வது வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த எண்ணிக்கை 1999 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க உலகின் மிகவும் வளமான சமுதாயத்தை கொண்ட நாடாகும். ஆனால் அங்கு உள்ள மக்கள் ஒருவிதமான மனநோய்க்கு அடிமையாக்கி உள்ளனர் என்ற ஒரு அறிகுறி தெரிகிறது.
 
 
இந்த ஆபத்தை நோக்கி இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் இதற்காக காரணம் என்ன? அனைவரிடம் உரையாடவும், விழாக்களில் பங்கேற்கவும் எந்த பற்றாக்குறை இல்லை. சந்தோஷ்மாக இருப்பது ஒரு தகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொருவரும் நண்பர்கள், குடும்பத்தினர் என்று நேரடியாக பேச எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனாலும் இந்த தற்கொலைக்கு செல்பவர்கள் யார் என்று பார்த்தால், நம்ம பக்கத்தில் உட்கார்ந்து, நம்முடன் பேசி மகிழ்ந்த நபர் தான் தூக்கு போட்டுக் கொள்வது, விஷம் அருந்துவது, சில நேரங்களில் ரயில் தண்டவாளங்கள் விழுவது, மாடியில் இருந்து குதிப்பது, இப்படி தங்கள் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைப்பது. 
 
ஏன் இப்படி நடக்கிறது? மரணம் என்பது என்றோ ஒரு நாள் வரப்போவது தான். எதற்காக தற்கொலை? அப்படி என்ன அவர்கள் மனதில் ஏற்ப்பட்டு விடுகிறது, அவர்கள் வாழ்க்கையில் மரணத்தைத் தேர்வு செய்கிறார்கள். 
 
ஒன்றை தெரிந்திக் கொள்ளுங்கள்.. நீங்கள் இந்த சமுதாயத்தில் தனியாக இல்லை. உங்கள் குடும்பம், பக்கத்து வீட்டுக்காரக்கள், சமுதாயம் என உங்களை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமான அண்டை வீடுக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பேசுங்கள், தயவுசெய்து!!
 
 
தீவிரமாக வளர்ந்துவரும் சமுதாயத்தின் தற்கொலையைக்கான சில காரணிகளைப் பற்றி நாம் பேசலாம். இந்த காரணிகளால் தற்கொலைக்கு தீர்வு காணலாம்.....
 
நண்பர்களின் எண்ணிக்கை 'ஜீரோ'. "ஜீரோ" எண்ணை மொபைலில் தேடுவது சிரமம். யார்க்கிட்டையாவது பேசும் போது "ரெகார்ட்" பன்றங்களா என பயப்படத் தேவையில்லை. கஷ்டம், துயரமும் என்பது அப்பறம், முதலில் மனதில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேண்டும். ஆனால் நண்பர்களை சந்திப்பதில்லை, குடும்பத்தில் தொடர்பு இல்லாமல் இருப்பது, இதுவெல்லாம் ஆபத்தான அறிகுறியாகும். மனகஷ்டத்தை பகிர்ந்துகொள்வதை நிறுத்திவிட்டு, மனநோயின் பாதையைத் திறந்து விடுகிறீர்கள். இப்படி செய்து உங்களை நீங்களே தவறான பாதைக்கு அழைத்து செல்கிர்கள்? எனவே அதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நேரம் ஒதுக்குங்கள். நண்பருடன் பேசுங்கள். உங்கள் மனதில் இருந்து குப்பைகள் அகன்று விடும். எனவே நான் தவறு செய்துவிட்டேன், மக்கள் என்ன சொல்வார்கள் போன்ற விஷயங்கள் முற்றிலும் பயனற்றவை. மக்கள் எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். அதனால் அவர்களை எதிர்கொள்ளுங்கள். தவறான புகழ் மற்றும் மரியாதை என்ற மூச்சுத்திணறல் ஏற்படும் இருளில் இருந்து வெளியே வாருங்கள்.
 
தற்கொலை செய்துகொள்வதற்கு முக்கிய காரணமே மன அழுத்தம் தான். நம்மை சுற்றி பல்வேறு காரணிகள் நம்மை அழுத்தும்போது, அதனை செய்ய முடியாமலும், சமாளிக்க முடியாமலும் திணறுகிறோம். ஒரு கட்டத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நாம் தகுதி இல்லாதவர்கள் என நினைக்கிறோம். இப்படி தான் எதையும் தாங்கும் சக்தி மற்றும் திறன் ஆகியவற்றிலிருந்து நாம் விலகி செல்கிறோம்.
 
இதனால் தான் தற்கொலை செய்துகொள்வதில் அவர்கள் பின்வாங்குவது இல்லை. நீங்களே உங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு தண்டனை, இது இரு கோழைத்தனமான செயல். தற்கொலை எதற்குமே தீர்வு அல்ல என்பதை உணரவேண்டும்...
 

நன்றி: திரு. தயா சங்கர் (ஜீ நியூஸ் இந்தி டிஜிட்டல் ஆசிரியர்)

மொழி பெயர்ப்பு: சிவா முருகேசன் (ஜீ நியூஸ் தமிழ்)

ட்விட்டர்: https://twitter.com/dayashankarmi

முகநூல்: https://www.facebook.com/dayashankar.mishra.54

 

Trending News