Coal India Limited Recruitment 2022: 1050 மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை கோல் இந்தியா லிமிடெட் தொடங்கியது. GATE 2022 தேர்வில் தகுதியான மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நடைமுறை ஜூன் 23 அன்று தொடங்கி ஜூலை 22, 2022 அன்று முடிவடைகிறது. 1050 பணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்.
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள்
சுரங்கம்: 699 காலியிடங்கள்
சிவில்: 160 காலியிடங்கள்
மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு: 124 காலியிடங்கள்
EDP: 67 காலியிடங்கள்
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு நல்ல செய்தி: அக்டோபருக்கும் 42000 பேருக்கு அரசுப்பணி
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்கள்
கல்வி தகுதி
சுரங்கம், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பொறியியல் பிரிவில் BE/ B.Tech/ B.Sc (Eng.).
கணினி மற்றும் EDP: BE/ B.Tech/ B.Sc (Eng.) கணினி அறிவியல்/கம்ப்யூட்டர் இன்ஜி./IT அல்லது MCA, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE - 2022) எழுதியிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொது (UR) & EWS வகை விண்ணப்பதாரர்களுக்கு 31-மே-2022 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வு குறித்து மேலே உள்ள விரிவான அறிவிப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை!
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
பொது (UR) / OBC (கிரீமி லேயர் & கிரீமி அல்லாத அடுக்கு) / EWS: ரூ 1180/-
SC / ST / PwD / ESM விண்ணப்பதாரர்கள் / கோல் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பணியாளர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிப்பது எப்படி?
CIL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.coalindia.in க்கு செல்லவும்
முகப்புப்பக்கத்தில் "Career with CIL" டேப்பின் கீழ் "கோல் இந்தியாவில் வேலைகள்" என்பதைக் கிளிக் செய்யவும்
"GATE-2022 மதிப்பெண்ணின் அடிப்படையில் மேலாண்மைப் பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிக்க நேரடி இணைப்பு
புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில், "விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான ஆன்லைன் உள்நுழைவு போர்டல்" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்நுழையவும்
தேவையான சான்றுகளை உள்ளிட்டு ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால குறிப்புகளுக்காக உங்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
கோல் இந்தியா ஆட்சேர்ப்பு 2022: தேர்வு செயல்முறை
GATE-2022 மதிப்பெண்கள்/மதிப்பீடுகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்,
தேர்வுச் செயல்முறைக்கு 1:3 என்ற விகிதத்தில் துறை வாரியாக தேர்வு செய்யப்படுவார்கள். GATE-2022 மதிப்பெண்கள்/மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறைக்கும் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
மேலும் படிக்க | மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR