அனைத்து வீடுகளிலும் தற்போது ஃப்ரிட்ஜ் (Fridge) உள்ளது. அதன் விலையும் அதன் பயன்பாட்டைப் போலவே அதிகமாக இருக்கிறது. சரியான முறையில் பராமரித்துக் கையாள்வது அவசியம். எவ்வாறு என்பதைக் காணலாம்.
வெதுவெதுப்பான நீரில் டிஷ்வாஷ் சேர்த்து கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை தேய்த்துக் கழுவலாம். இதை இரண்டு முறை தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் ஃப்ரிட்ஜ் புதிது போன்று மின்னும்.
ALSO READ | Baking Soda இன் நன்மைகளை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
கறைப் படிந்த இடத்தில் சிறிது வினிகரை (Vinegar) தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான துணியால் தேய்த்தால், கறைகளானது காணமல் போய்விடும். கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், பேக்கிங் சோடாவை (Baking Soda) கறைப் படிந்த இடத்தில் தூவி, பின் வினிகரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து பின் தேய்த்தால், கறைகள் நீங்கிவிடும்.
எலுமிச்சைக் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்தால், ஃப்ரிட்ஜ் (Fridge) நன்கு நறுமணத்துடன் இருக்கும் அத்துடன் அதில் படிந்திருக்கும் கறைகள் நீங்கிவிடும்.
ஃபிரிட்ஜ்ஜின் வெப்ப நிலையை குறைத்து வைத்தீர்களானால் அதன் குளுமையும் அதிகமாக இருக்கும். மளிகை பொருட்களும் அதிக குளுமையாகிவிடும். ஃபிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருளுக்கு ஏற்ப வெப்ப நிலையை வையுங்கள்.
கதவின் மேல் உள்ள ரப்பர் கேஸ் கெட்டை மாதத்திற்கு ஒரு முறை கழட்டி சுத்தம் செய்வது அவசியம். கழுவும்போது வினிகர் பயன்படுத்திக் கழுவினால் பிசுபிசுப்புகளின்றி சுத்தமாக இருக்கும். இல்லையெனில் ஃபிரிட்ஜின் குளுமை வெளியேறி பொருட்கள் கெட்டுப் போகும். மின்சார செலவும் அதிகமாகும்.
ALSO READ | தினம் ஒரு குவளை தக்காளி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தண்ணீர் ஃபில்டரில் தேவையில்லாத நீர் வெளியேறி ஃபிரிட்ஜ்ஜின் பராமரிப்பை கவனித்துக் கொள்ளும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாட்டர் ஃபில்டரை மாற்றுவது அவசியம். இலையெனில் அழுக்குகள் படிந்து நீர் வெளியேறாமல் அடைத்துக் கொண்டால் துர்நாற்றம் வீசும். ஃபிரிட்ஜ்ஜும் பாழாகிவிடும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR