Christmas 2020: 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதற்கும் ஒரு சவால் மிகுந்த ஆண்டாக இருந்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி கொண்டாட்டமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
ஆண்டு முழுவதும் கலக்கத்திலும் குழப்பத்திலும் கழிந்ததால், கிறிஸ்துமசை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Whatsapp கிறிஸ்மஸ் 2020 ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி:
கிறிஸ்துமஸ் 2020 (Christmas 2020) வந்துவிட்டது. திருவிழா என்பது அரவணைப்பையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதாகும். நம் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து அவர்களுடன் நாம் வாழ்த்துகளையும் பரிசுகளையும் இந்த நாளில் பரிமாறிக்கொள்கிறோம். சந்திக்க முடியாதவர்களுடன் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் நம் பாசத்தை பகிர்ந்துகொள்கிறோம்.
மக்கள் பெரும்பாலும் பரிசுகளையும் வாழ்த்து அட்டைகளையும் கொடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். ஆனால் வாழ்த்து அட்டைகள் இந்த காலத்தில் ஒரு அரிய விஷயமாக மாறிவிட்டன. தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் அவை வழக்கிலிருந்து போய்விட்டன என்றே கூறலாம்.
தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுகையில், இப்போது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை அனுப்புவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புதிய செயலிகள் மற்றும் சமூக ஊடக தளங்களின் உதவியுடன் இவை வேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாறிவிட்டன. நாம் நமது பெரும்பாலான நேரத்தை கழிக்கும் ஒரு அம்சமாக வாட்ஸ்அப் (Whatsapp) நம் வாழ்க்கையில் ஒன்றிணைந்து விட்டது. இந்த கிறிஸ்மஸில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுடன் (Whatsapp Stickers) வாழ்த்து தெரிவிப்பது ஒரு மிக நல்ல முறையாக இருக்கும்.
COVID-19 தொற்று பரவியிருக்கும் இந்த கடினமான காலங்களில் தனி மனித இடைவெளியை நாம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்த வேளையில் வாட்ஸ்அப் கிறிஸ்மஸ் 2020 ஸ்டிக்கர்கள் நமக்கு மிக சரியான தேர்வாக இருக்கும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எவ்வாறு Whatsapp மூலம் ஆன்லைனில் உற்சாகத்தை பரப்பலாம் என இங்கே காணலாம்.
கிறிஸ்மஸ் 2020: கிறிஸ்துமஸ் கருப்பொருள் கொண்ட Whatsapp ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொள்வதற்கான வழிகாட்டி:
Step 1: உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் Whatsapp-ஐத் திறக்கவும்
Step 2: நீங்கள் கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் தொடர்பு அல்லது குழுவைத் தேர்ந்தெடுக்கவும்
Step 3: ஈமோஜி பிரிவில் 'Stickers’ டேபைத் திறக்கவும்
Step 4: ஸ்டிக்கர் விண்டோவின் மேல் வலது மூலையில் உள்ள '+' பொத்தானைக் கிளிக் செய்யவும்
Step 5: முழு படியலையும் ப்ரௌஸ் செய்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்குகளை செலக்ட் செய்யவும். பட்டியலில் சுவாரஸ்யமான எதையும் நீங்கள் காணவில்லை எனில், பட்டியலின் முடிவில் உள்ள 'Get more stickers’ ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.
Step 6: பல WhatsApp Sticker Apps காண்பிக்கப்படும் கூகிள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) நீங்கள் மாற்றப்படுவீர்கள்
Step 7: இங்கே, நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலியைத் தேர்வுசெய்யலாம் அல்லது சிறந்த முடிவுகளைக் கண்டறிய உங்கள் தேடலைத் தனிப்பயனாக்கலாம்.
Step 8: நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டிக்கர் பயன்பாட்டைக் கண்டதும், அதை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கி நிறுவவும்
Step 9: WhatsApp-க்குச் சென்று, சேட் விண்டோவைத் திறந்து பதிவிறக்கம் செய்த ஸ்டிக்கர்களை அனுப்பவும்
இந்த வகையில் கொரோனாவைரஸ் தொற்று காலத்திலும், நீங்கள் உங்கள் உறவுகளுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் WhatsApp மூலம் உங்கள் கிறிஸ்துமஸ் (Christmas) வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளுங்கள்.
“கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!”
“Merry Chrismas!!”
ALSO READ: Christmas: White house-இல் டொனால்ட் டிரம்பின் கடைசி கொண்டாட்டம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR