Christmas 2023: கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

Christmas 2023 Gift Ideas For Kids: கிறிஸ்துமஸ் தினம் விரைவில் வர இருப்பதை முன்னிட்டு குழந்தைக்கு என்ன கிஃப்ட் கொடுப்பதென்று தெரியவில்லையா? இதோ சில ஐடியாக்கள். 

Written by - Yuvashree | Last Updated : Dec 23, 2023, 05:53 PM IST
  • கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்னும் சில தினங்களில் கொண்டாட உள்ளோம்.
  • குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசு ஐடியாக்கள்.
  • வயதுக்கேற்ப பரிசு கொடுக்க சிறந்த யோசனைகள்
Christmas 2023: கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? title=

கிறிஸ்துமஸ் தினம் என்றாலே பண்டிகையும் கொண்டாட்டமும் களைக்கட்டிவிடும். மதங்களை தாண்டி, இந்தியாவில் பலர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவதுண்டு. இந்த நாளில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி பரிசுகளை பகிர்ந்து மகிழ்வர். அந்த வகையில், இன்னும் இரு தினங்களில் இந்த வருடமும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. பலர், கடைசி நிமிடத்தில் குழந்தைகளுக்கு என்ன கிஃப்ட் கொடுப்பதென தெரியாமல் விழி பிதுங்கி இருப்பர். அவர்களுக்காகவே இந்த பதிவு. 

குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசு..

குழந்தைகளுக்கான சரியான கிறிஸ்துமஸ் பரிசை தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களின் வயது, ஆர்வங்கள் மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு, மென்மையான பொம்மைகள் மற்றும் இசை மொபைல்கள் போன்ற பொருட்களைத் தேர்வு செய்யவும். டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையை பயன்படுத்தி விளையாடும் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஏதேனும் ஆக்கப்பூர்வமான கருவிகளையும் பரிசளிக்கலாம். அதே நேரத்தில் பள்ளி வயது குழந்தைகள், பலகை விளையாட்டுகள், கல்விக்கு உபயோகமாகும் பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை விரும்புகின்றனர். பதின்வயதினர் தொழில்நுட்ப கேஜெட்டுகள், நாகரீகமான உடைகள் மற்றும் கையடக்க பொருட்களை பரிசாக பெருவதில் பெருமையடைகின்றனர். 

பொதுவாக, எல்லா நேரத்திலும் வாங்கி கொடுக்ககூடிய சில பொருட்களும் இருக்கின்றன. அவை புத்தகங்கள், ஏதேனும் விஷயத்திற்கான சப்ஸ்கிப்ஷன், விளையாட்டு பொருட்கள் போன்றவைதான் அவை. இது குழந்தைகளின் வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப மாறுபடும். 

2 வயதிற்குள்ளான குழந்தைகளுக்கான பரிசுகள்:

>மென்மையான பெரிய அல்லது சிறிய வகை  பொம்மைகள்
>குழந்தைகளுக்கான கார்டூன் புத்தகங்கள், கலரிங் புத்தகங்கள், படிக்க உதவும் புத்தகங்கள்.
>பொம்மை மொபைல்கள். 

3 முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கான பொம்மைகள்:

>பொம்மை பிளாக்குகள். குழந்தைகளுக்கான கட்டுமான பொம்மைகள். 
>க்ரையான்ஸ், மார்க்கர், கலரிங் புத்தகங்கள்
>பலகை விளையாட்டுகள்: செஸ், கேரம் போன்றவை
>பேசும் பொம்மைகள்

மேலும் படிக்க | ‘இப்படி’ வாக்கிங் செய்து பாருங்கள்! சுகர் லெவல் சர்ரென இறங்கும்!

6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கான பொம்மைகள்:

>பசில் விளையாட்டுகள்
>புத்தகங்கள், அவர்களின் வயதுக்கேற்ப நாவல்கள்
>பெரிய அளவிலான பலகை விளையாட்டுகள்
>விளையாட்டு உபகரணங்கள்: பேட், பால், சைக்கிள்
>ஆக்கப்பூர்வமான சயின்ஸ் கிட் உபகரணங்கள்
டீன் ஏஜ் குழந்தைகளுக்கான கிஃப்ட்:

>கேட்ஜெட்டுகள்: ஹெட்போன்ஸ், ப்ளூட்டூத் ஸ்பீக்கர், டேப்

>அவர்களுக்கு பிடித்தமான ஃபேஷன் ஆடைகள்

>அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்கான முக்கியமான உபகரணங்கள்

>வரைவதில் ஆர்வம் இருப்பவர்களாக இருந்தால் பெரிய அளவிலான ஸ்கெட்ச் புத்தகம், பெயிண்டுகள் மற்றும் அதற்கான உபகரணங்கள். 

அனைத்து வயதினருக்கும் ஏற்ற பரிசுகள்:

>கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள்: கடைகளில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அட்டைகள் விற்கின்றன. இவற்றை வாங்கி குழந்தைகளுக்காக ஏதேனும் எழுதி கொடுக்கலாம். அல்லது, ஆன்லைனில் இதை செய்வதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் பின்பற்றலாம். 

>நாளிதழ், புத்தக ஆப்ப்புகள், ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன், ஆடியோ புத்தகங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன் போன்றவற்றை பரிசளிக்கலாம். 

>கைகளால் செய்த பொருட்களை பரிசாக கொடுக்கலாம். 

>வெளியில் அழைத்து செல்வது பெரிய அனுபவ பரிசாக இருக்கும். படத்திற்கு அழைத்து செல்வது, சாகச பூங்காக்களுக்கு அழைத்து செல்வது, குடும்பத்துடன் பிடித்த இடத்திற்கு செல்வது போன்றவை இதில் அடங்கும். 

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு சக்தி வரை! கருப்பு பூண்டின் மேஜிக் மகிமைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News