திருமணமாகப்போகும் ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் ட்சா நிறுவனம்!!
திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். அது உண்மைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். ஆடையில் இருந்து நகைகள் வரை அனைத்தையும் பாத்துப்பபார்த்து தங்களின் திருமணத்திற்கு வாங்குவார்கள்.
தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், பீட்சா நிறுவனம் ஒன்று திருமணமாகப்போகும் ஜோடிகளுக்கு ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெரும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது.
அதாவது சிகாகோவைச் சேர்ந்த ‘சிகாகோ டவுன் பீட்சா’ நிறுவனம் ‘பீட்சா பிரைடல் பேக்கேஜ்’ (Pizza Bridal Package) என உலக அளவில் முதல் முறையாக இப்படியொரு யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த நிறுவனம் திருமணமாகப்போகும் ஜோடிகளைப் பங்கேற்கச் செய்து அதில் வெற்றி பெரும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. அதன் கருப்பொருள் முழுக்க முழுக்க பீட்சா மட்டுமே. திருமணப்பெண் அணியும் ஆடை , கேக் , உணவு என எல்லாமே பீட்சா. இதை அறிவித்த நொடியில், பீட்சா மீது காதல் கொண்டோர் பலரும் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற முதல் ஜோடிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது.
அதில் திருமணப் பெண்ணின் ஆடை முற்றிலும் பீட்சா தோற்றத்தில் பெப்பரோனி ( pepperoni) ஃப்ளேவரில் வடிவமைத்துள்ளது. வெட்டிங் கேக்-ஆக மூன்று அடுக்கு பீட்சா கேக் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் வரும் உறவினர்களுக்கும் திருமண விருந்தும் பீட்சா. அந்த திருமண அறையும் முற்றிலும் பீட்சாவை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமன்றி திருமணமான ஜோடிக்கு பீட்சாவில் பூங்கொத்து , ஹனிமூன் பேக்கேஜ் அதோடு செலவு செய்ய 45,000 ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது. சிகாகோ அல்லாது மற்ற மாநிலங்கள் , மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹனிமூனை சிகாகோவில் கழிக்க ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
பீட்சா தோற்றத்தில் ஆடை என்கிற யோசனை; லண்டனைச் சேர்ந்த பாடகி ரிஹனாவின் மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மஞ்சள் நிற கவுன் அணிந்துவந்தார். அதன் தரை தொடும் டிசைன் பீட்சா வட்டம் போல் உள்ளது என்று நெட்டிசன்களால் மீம்ஸ் பரப்பப்பட்டது. அந்த மீம்ஸ்தான் அவர்களுக்கு இந்த யோசனையை உதிக்கச் செய்தது என்று இதன் மேலாளர் ரேச்சல் கூறியுள்ளார்.