High Court: கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல

ஒரு ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வ திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு "வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும்" அது கற்பழிப்பு அல்ல என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்  திருமண பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள்து

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 26, 2021, 06:46 PM IST
  • கணவன், மனைவியை கட்டாய உடலுறவு செய்தாலும் அது குற்றமாகாது
  • "இயற்கைக்கு மாறான உடல் உறவை" ஏற்படுத்தியது குற்றம் என்று நீதிமன்றம் ஒத்துக் கொண்டது
  • வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அது கற்பழிப்பு அல்ல என்று நீதிமன்றம் கூறியது
High Court: கணவன்-மனைவி இடையிலான பாலியல் உறவு ‘வலுக்கட்டாயம் என்றாலும்’ கற்பழிப்பு அல்ல title=

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், கணவன் மனைவி உறவு மிகவும் நுணுக்கமானது என பல பழமொழிகளை கேட்டிருக்கலாம். கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வராமல் இருக்காது. ஊடலும் கூடலும் காதலிலும், திருமணத்திலும் இயல்பானது தான். 

ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே? ஊடல், விவகாரமானால் விவாகரத்து வரை சென்றுவிடலாம். கணவர் தன்னை இயற்கைக்கு மீறிய பாலியல் செயல்களுக்கு கட்டாயப்படுத்துவதாக, மனைவி அளித்த அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் "திருமண கற்பழிப்பு" வழக்கை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் இன்று (2021, ஆகஸ்டு 26; வியாழக்கிழமை) திருமண பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவித்தது. ஒரு ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வ திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு (sexual intercourse) "வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும்" அது கற்பழிப்பு அல்ல என்று நீதிமன்றம் கூறியது. 

Also Read | கணவனாக இருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமால் உறவு கொள்வது பாலியல் குற்றம்

இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) பிரிவு 377 இன் கீழ் அவரது மனைவியுடன் "இயற்கைக்கு மாறான உடல் உறவை" ஏற்படுத்தியது குற்றம் என்று நீதிமன்றம் கணவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், திருமண பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான இந்தத் தீர்ப்பு இந்தியாவின் நீதி அமைப்பில் மிகப் பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. 

".. தனது சொந்த மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வதோ அல்லது பாலியல் செயல்பாடு செய்வது என்பது, மனைவி பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால் மட்டுமே கற்பழிப்பு என்று எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில், புகார்தாரர் விண்ணப்பதாரர் எண் 1 இன் சட்டப்படி திருமணமான மனைவி, மேலும் 18 வயதுக்கு அதிகமானவர்.

எனவே, விண்ணப்பதாரர் எண் 1 ஆகிய மனைவியுடன், கணவர் செய்யும் எந்த பாலியல் செயலும் பலாத்கார குற்றம் கிடையாது. அது வலுக்கட்டாயமாக இருந்தாலும் சரி அல்லது மனைவியின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட தவறானது அல்ல" என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

Also Read | 'காந்தியடிகளின் இந்தியாவில் இதை எதிர்பார்க்கவில்லை': ஆப்கான் பெண் நாடாளுமன்ற எம்.பி

குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் "திருமண கற்பழிப்பு" வழக்கை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. புகார்தாரரின் கூற்றுப்படி, திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கணவரும் அவரது மாமியாரும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கினர். அதோடு, விண்ணப்பதாரருடன் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாக LiveLaw.in தெரிவித்துள்ளது.

அப்படி என்ன கணவர் பாலியல் கொடுமை செய்தார்? மனைவியின் பிறப்புறுப்பில் (vagina) விரல்களையும் முள்ளங்கியையும் செருகி, மனைவியை இயற்கைக்கு மாறான உடல் உறவுக்குக் கட்டாயப்படுத்தினார். 

"மனைவியின் அந்தரங்க பகுதியில் விரல் மற்றும் முள்ளங்கியைச் செருகுவதைத் தவிர, கணவர் இயற்கைக்கு மாறான உடல் உறவைச் (unnatural sex) செய்தார் என்று புகார் கொடுத்தவர் சாட்சியமளிக்கவில்லை, ஆனால், அந்த அடிப்படையில், பிரிவு 377 இன் கீழ் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, குற்றவாளியின் ஆதிக்கம் செலுத்தும் நோக்கம் இயற்கைக்கு மாறான பாலியல் திருப்தியைப் பெறுவதாகும், பாதிக்கப்பட்டவரின் பாலியல் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஒரு பொருளை செருகி அதன் விளைவாக பாலியல் இன்பத்தைப் பெறுவது அவருடைய விருப்பமாக இருந்திருக்கிறது, அத்தகைய செயல் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவாக கருதப்படும். ஐபிசி பிரிவு 377 இன் கீழ் இது குற்றம் தான்” என்று உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | மனைவியின் மனம் கவர் கணவனாக இருக்க சில டிப்ஸ்..!!!

இதேபோன்ற தீர்ப்பை மும்பை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் வழங்கியது. தனது கணவர் கட்டாய உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணின் புகார் சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்று நீதிமன்றம கூறியது. கட்டாய உடலுறவு கொண்டவர் "கணவனாக இருப்பதால் அவர் சட்டவிரோதமான காரியத்தைச் செய்தார் என்று கூற முடியாது" என்று நீதிமன்றம் கூறியது.

இதுபோன்ற தீர்ப்புகள் மக்கள் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் அப்பெண் தனது மனைவி என்ற காரணத்திற்காக பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை அணுகுவது பாலியல் துன்புறுத்தலில் தான் அது சேரும். இப்படி ஒரு தீர்ப்பினை சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் புமனைவியின் கோரிக்கையை ஏற்று கேரள கீழ் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது. தீர்ப்பை எதிர்த்து மருத்துவரான கணவர் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விவாகரத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

'திருமணம் ஆகியிருந்தாலும் கணவன் தன்னுடைய மனைவியை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டால் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை என்று கருதி' பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விவாகரத்து வழங்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ALSO READ | இந்த டீல் எனக்கு புடுசுருக்கு; கட்டிய மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News