இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பால் வகைகள் இரண்டுதான். ஒன்று பசும்பால், இன்னொன்று எருமை பால். அதிலும் நம்ம ஊரில் பல உணவு பொருட்கள் பாலில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. சத்துக்களுக்காக மட்டுமல்ல, சாமி கும்பிடுவதற்காக, பூஜை காரியங்களுக்காகவும் பாலை நாம் பயன்படுத்தி வருகிறோம். எருமை மாட்டு பால் அதிக புரதம் மற்றும் சுவை மிகுந்ததாக இருக்கும். எருமைப்பாலில் உள்ள கால்சிய சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பசுவின் பால் குறைந்த கொழுப்பை கொண்டிருக்கும். இதனால், ஜீரணிக்க எளிதானது. எருமைப்பாலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும்.
எருமை பால் Vs பசும்பால்
பசுவின் பால் மற்றும் எருமை பால் கொழுப்பு வகைகள், புரதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களினால் வேறுபடுகின்றன. இவை மட்டுமன்றி, அதன் நிலைகள், சுவை மற்றும் ஊட்டச்சத்து கலவை உள்ளிட்டவற்றாலும் வேறுபடுகின்றன. எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது. பசும்பால் அதிக புரத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, இதனால் இது பலருக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.
மேலும் படிக்க | பல்வலி பாடாய் படுத்துதா..? சரிசெய்ய ‘இந்த’ சமையலறை பொருட்களை யூஸ் பண்ணுங்க!
எருமைப்பாலில் சுவை அதிகமாக இருக்கு, தனித்துவமான சத்துக்களும் இருக்கும். இதில் தன்ணீர் சத்து அதிகம் இல்லாமல் இருப்பதாலும் கொழுப்பில் அளவு அதிகளவில் இருப்பதாலும் இது பலருக்கு விருப்ப தேர்வாக அமைகிறது. இதில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நமது எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன. இன்னொரு பக்கம், பசுவின் பாலில் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் பி 12 சத்துக்கள் நமது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.
எந்த பாலை குடிக்கலாம்? எது கெடாமல் இருக்கும்?
பசும்பாலை ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு காய்ச்சி வைத்து கெடாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், எருமை பால் அதை விட நீண்ட நாட்களுக்கு கெடாமல் பார்த்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. எருமை பாலாக இருந்தாலும் சரி, பசும்பாலாக இருந்தாலும் சரி அதை நமது விருப்பத்தின் படி, ஆரோக்கியமான முறையில் அருந்தலாம். பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை விட, நேரடியாக மாடுகளிடம் இருந்து கறந்த பாலை பயன்படுத்துவது சிறந்தது என சில ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அதன் முழு சுவை மற்றும் பலனகளை அனுபவிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. நீங்கள், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவராக இருந்தால் கண்டிப்பாக பசும்பாலை உபயோகிக்கலாம். எருமை பாலை விட, இதில் கொழுப்பின் அளவு குறைவாகவே உள்ளது. உடல் எடையை திடமாகவும், கூட்டும் முயற்சியிலும் இருப்பவராக இருந்தால் எருமைப்பால் உபயோகிப்பது, உங்களது முயற்சிக்கு உதவி புரியும்.
மேலும் படிக்க | மதியானத்தில் தூங்கினால் வெயிட் ஏறுமா ஏறாதா? பதில் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ