Budget 2021: Work from home செய்பவரா நீங்கள்? உங்களுக்கு பட்ஜெட்டில் என்ன உள்ளது?

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 04:58 PM IST
  • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
  • நிதி அமைச்சகம் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்கக்கூடும்.
  • நிலையான விலக்கு உயர்வு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு நிவாரணமாக இருக்கும்.
Budget 2021: Work from home செய்பவரா நீங்கள்? உங்களுக்கு பட்ஜெட்டில் என்ன உள்ளது? title=

Union Budget 2021: கொரோனா வைரஸ் தொற்று நீடிக்கும் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்த புதிய இயல்பும் தொடரும் என்ற நிலை உள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகும் சில துறைகளில் இந்த முறை தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சகம் நிலையான விலக்கு அதாவது Standard Deduction Limit வரம்பை அதிகரிக்கக்கூடும். நிலையான விலக்கு உயர்வு என்பது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு நல்ல ஒரு நிவாரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் குறிப்பாக மாத சம்பளம் பெறும் தனிநபர் மற்றும் தொழில்முறை பணியாளர்களுக்கும் இது பெரும் நிவாரணமாக அமையும். வீட்டில் அலுவலக சூழலை (Work from Home) ஏற்படித்திக்கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் ஊழியர்கள் பல செலவுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

நிலையான கழித்தல் என்றால் என்ன?

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களால் 2018 இல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. நிலையான விலக்கு என்பது ஒரு தனிநபரின் சம்பள வரிவிதிப்பு வருமானத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு நிலையான விலக்கு ஆகும். இது வரி செலுத்துவோரின் கைகளில் அதிக பணத்தை அரசாங்கம் அளிக்க உதவும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஒரு நபரின் மருத்துவ மற்றும் பயணக் கொடுப்பனவுகளை நிலையான விலக்கு மாற்றியது.

முன்னர், சம்பளம் பெறும் தனிநபர் அல்லது ஓய்வூதியதாரர் ரூ .40,000 வரை கோரலாம் என விதி இருந்தது. இது அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ரூ .50,000 ஆக உயர்த்தப்பட்டது. அதுதான் நிர்மலா சீதாராமனின் (Nirmala Sitharaman) முதல் பட்ஜெட் அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்த தொகையை 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்

COVID-19 பரவுவதைத் தடுக்க, உலகின் பெரும்பகுதியில் மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதால், தனிநபர்கள் அதிக மின்சார செலவுகள், அலுவலக அமைப்புகளை நிறுவும் செலவு, பணி தொடர்பான செலவுகள் என பலவித செலவுகளை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, அரசாங்கம் ஊழியர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இது செலவு செய்யும் அல்லது முதலீடு செய்யும் திறனை அதிகரிக்கும்" என்று மனிடேப் லைவ்மின்ட்டிடம் தலைமை வணிக அலுவலகமும் இணை நிறுவனருமான குணால் வர்மா தெரிவித்தார்.

பிப்ரவரி 1 ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் அறிக்கைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த பட்ஜெட்டில் (Budget) தங்களுக்கான நல்ல செய்தி இருக்கும் என அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பும் உள்ளது.

ALSO READ: PM Kisan: இந்த Budget 2021 விவசாயிகளுக்கு பெறும் பரிசை வழங்கும்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News