ஆணுறுப்பை அறுக்க நண்பனுக்கு பணம் கொடுத்த இளைஞர்; வைரலாகும் Video!

ஆன்லைனில் வைரல் ஆக வேண்டும் என தனது ஆணுப்பை வெட்டும் காட்சியை படமாக்கு இணையத்தில் வெளியிட தனது நண்பனுக்கு பணம் கொடுத்த இளைஞர்!!

Last Updated : Apr 17, 2019, 06:21 PM IST
ஆணுறுப்பை அறுக்க நண்பனுக்கு பணம் கொடுத்த இளைஞர்; வைரலாகும் Video! title=

ஆன்லைனில் வைரல் ஆக வேண்டும் என தனது ஆணுப்பை வெட்டும் காட்சியை படமாக்கு இணையத்தில் வெளியிட தனது நண்பனுக்கு பணம் கொடுத்த இளைஞர்!!

மனிதனாய் பிறந்த அனைவருக்கும், நாமும் எப்படியாவது இணையத்தில் விரலாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். இணையத்தில் வைரலாக பலவகையான, குறும்பு வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவிடுவார்கள். இந்நிலையில், தான் இணையத்தில் வைரலாக வேண்டும் என்று தனது ஆணுப்பை வெட்டும் காட்சியை படமாக்கி இணையத்தில் வெளியிட தனது நண்பனுக்கு பணம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒருவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து வருவதாகவும், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் அவருக்கு உதவி செய்ய செல்ல உத்தரவு காவல் துறையினருக்கு வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு அவர் இருந்த நிலைமையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அங்கு ஒருவர் தனது அணுறுப்பு அறுபட்டு கிடந்தார். அவரது நண்பர் அங்கு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். 

உடனடியாக போலீசாரும் அவருடன் இணைந்து காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்பொழுது அவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். அதனால் அவரே தனது ஆணுறுப்பை அறுத்திருப்பார் என நினைத்தனர். இதற்கிடையில் அறுக்கப்பட்ட அவரது ஆணுறுப்பை மீண்டும் அவர் உடலுடன் சேர்க்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடந்தது. 

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்திய போது; சம்பவம் நடந்த அன்று ஆணுறுப்பு அறுக்கப்பட்டவரும் அவரது பிளாட்டில் உள்ள நண்பர் இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருந்த இவர்கள் தங்களது செல்போனில் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுக்கும் வீடியோ வைரல் ஆனதை பார்த்துள்ளனர். 

இந்நிலையில், அதே போல தாங்களும் வைரலாக நினைத்து ஒருவர் மற்றவரிடம் தனது ஆணுறுப்பை அறுக்க நினைப்பதாகவும், அதை மற்றவர் வீடியோ எடுக்க வேண்டும் எனவும், அந்த வீடியோ வைரலாக பரவினால் 4325 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ 4 லட்சம்) தருவதாக கூறினார். அவரும் ரூ 4 லட்சத்திற்கு ஆசைப்பட்டு சம்மதம் தெரிவிக்க ஆணுறுப்பை அறுத்து வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வீடியோ பதிவு செய்தவரை கைது செய்துள்ளனர். இணையத்தில் அவர் ஆணுறுப்பை அறுக்கும் வீடியோ அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆணுறுப்பு அறுபட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

Trending News