இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்: டிக்கெட் புக் செய்யும்போது இதில் கவனம் தேவை

Indian Railways: பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை சமாளிக்க, அதிக ரயில்களை இயக்குவது முதல் பல விஷயங்களை ரயில்வே செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2023, 04:00 PM IST
  • இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.
  • ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
  • ரயில் டிக்கெட்டில் கிடைக்கும் சலுகைகள்.
இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்: டிக்கெட் புக் செய்யும்போது இதில் கவனம் தேவை title=

இந்தியன் ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். சில விஷயங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். ரயில் பயணத்தின் போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். 

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை சமாளிக்க, அதிக ரயில்களை இயக்குவது முதல் பல விஷயங்களை ரயில்வே செய்கிறது. அதே நேரத்தில், இந்திய ரயில்வே டிஜிட்டல் இந்தியா முயற்சியையும் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இரயில்வே இ-கேட்டரிங் சேவையை வழங்குகிறது. இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஆப் / கால் சென்டர் / இணையதளம் / அழைப்பு 1323 -ஐப் பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். இருப்பினும், இங்கே உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் இ-டிக்கெட் ஆகும்.

பல பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள், ஆனால் அந்த டிக்கெட்டை டவுன்லோட் செய்யாமல் இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், ரயில்வே துறையினரின் சோதனையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் தொடர்பாக போதுமான ஆதாரம் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

-இதற்கு முதலில் இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான - irctc.co.in -இல் லாக் இன் செய்யவும்.

- பயனர்பெயர், கடவுச்சொல், கேப்ட்சாவை உள்ளிட்டு OTP விருப்பத்துடன் முன்பதிவு செய்து லாக் இன் செய்யவும். 

- நீங்கள் irctc இணையதளத்தில் லாக் இன் செய்ததும், 'புக் செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு (booked ticket history)' பக்கம் திறக்கும்.

- IRCTC booked ticket history பக்கத்தில், PNR எண்ணைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை எளிதாகக் கண்டறியலாம்.

- 'பிரிண்ட் இ-டிக்கெட்' பட்டனைத் தேர்ந்தெடுத்து PDF-ஐச் சேவ் செய்யவும்.

- ரயில் டிக்கெட்டின் PDF ஐ சேவ் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே.. புதிய ரூல்ஸ்: இரவு நேர பயண விதிகளில் மாற்றம், இனி இதையெல்லாம் செய்ய முடியாது!!

ரயில் டிக்கெட்டில் கிடைக்கும் சலுகைகள்

வரும் நாட்களில் ரயிலில் பயணம் செய்யும் திட்டம் இருந்தால், ஒரு முக்கிய தகவலை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ரயிலில் எந்தெந்த நபர்களுக்கு இன்னும் தள்ளுபடியின் பலன் கிடைக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியமாகும். உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க் ஆக இருக்கும் இந்தியன் ரயில்வே ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இலக்குகளை நோக்கி பயணிக்கிறார்கள். இன்றும் பலருக்கு டிக்கெட் சலுகையின் பலனை ரயில்வே வழங்கி வருகிறது.

இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன

மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி சலுகையை ரயில்வே வழங்குகிறது. இவர்களுக்கு பொது வகுப்பு முதல் ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசி வரையிலான டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கும். இவர்கள் டிக்கெட்டுகளில் 75 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறுகிறார்கள்.

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே (Indian Railways) நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

மேலும் படிக்க | 450+ ரயில்கள்... 23 நடைமேடைகள்... இந்தியாவின் 5 பெரிய ரயில் நிலையங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News