Madurai Tourist Places: தமிழ்நாட்டின் வரலாற்று தளமாக மதுரை உள்ளது. அதன் பாரம்பரியமிக்க தெருக்கள், கோவில்கள், கட்டிடக்கலை என சிறப்பு வாய்ந்தது. பாண்டிய நகரமான மதுரையின் அருகில் மலைகள் மற்றும் காடுகளின் நிலப்பரப்பால் சூழ்ந்துள்ளது. மலை பிரதேசங்களை சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இயற்கையான அழகு, நல்ல காற்று, மிதமான தட்பவெப்பநிலையின் மதுரை அருகில் சில சுற்றுலா தளங்கள் உள்ளன. வார இறுதியில் அல்லது விடுமுறையில் மதுரையின் அருகில் உள்ள இந்த சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழுங்கள்.
மேலும் படிக்க | பிரேக்-அப்பில் இருந்து மீள..எளிமையான 6 டிப்ஸ்!
கொடைக்கானல் (Kodaikanal)
கொடைக்கானல் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தளம் ஆகும். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை காற்று, பைன் காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான ஏரிகளுக்கு பெயர் பெற்றது. பலரின் விருப்பமான இடமாக கொடைக்கானல் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் உள்ளது கொடைக்கானல். கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி, பெரிஜம் ஏரி, பூம்பாறை, தூண் பாறைகள், பைன் காடு, மன்னவனூர் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் போன்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.
ஏற்காடு (Yercaud)
ஏற்காடு தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாழ் நகரமாகும். இந்த இடம் அதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலைக்கு பெயர் பெற்றது. ஏற்காடு தோட்டங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஏற்காடு ஏரி, லூப் ரோடு, பகோடா பாயின்ட், கரடி குகை, பகோடா பாயின்ட், பட்டு பண்ணை, மற்றும் ரோஜா தோட்டம், கொட்டச்சேடு தேக்கு காடு, கிள்ளியூர் அருவி போன்றவை பிரபலமான சுற்றுலா தளங்கள் ஆகும்.
மூணாறு (Munnar)
கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு நகரம் மூணாறு ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட இடம் இது ஆகும். எக்கோ பாயிண்ட், பொதமேடு காட்சி முனை, இரவிகுளம் தேசிய பூங்கா, டாடா டீ மியூசியம், வொண்டர் வேலி அட்வென்ச்சர் & கேளிக்கை பூங்கா, சீயப்பாரா நீர்வீழ்ச்சி, ஆட்டுக்காடு நீர்வீழ்ச்சி, குண்டலா ஏரி, சின்னார் வனவிலங்கு சரணாலயம் போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளது.
இடுக்கி (Idukki)
இடுக்கி தென்னிந்தியாவின் கேரளாவில் உள்ள மலைகள் நிறைந்த பகுதியாகும். கேரளாவின் மாவட்டங்களில் ஒன்றான இடுக்கி, பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. பசுமை மற்றும் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்ற இடுக்கி கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஆனைமுடி மலை கோபுரங்கள் இரவிகுளம் தேசிய பூங்கா, புலி மற்றும் யானைகள் காப்பகம், ஹில் வியூ பூங்கா, இடுக்கி அணை, பெரியார் தேசிய பூங்கா, இடுக்கி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை அங்குள்ள பிரபலமான சுற்றுலா தளமாகும்.
வால்பாறை (Valparai)
வால்பாறை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் அமைந்துள்ள சுற்றுலா தளம் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த இடம் தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், தேக்கு தோட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகம், சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி வியூ பாயின்ட் ஆகியவை வால்பாறையில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் ஆகும்.
மேலும் படிக்க | ‘இப்படி’ வாக்கிங் செய்து பாருங்கள்! சுகர் லெவல் சர்ரென இறங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ