காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.   

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2024, 06:09 AM IST
  • காலை, இரவு பல் துலக்க வேண்டுமா?
  • பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்.
  • பல் மருத்துவர்கள் சொல்லும் முக்கிய விஷயம்.
காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! title=

Best Time To Brush: உடலை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அதே அளவு வாய் சுத்தமும் இருக்க வேண்டும். பேசும் போது வாயில் இருந்து துர்நாற்றம் வந்தால் நமக்கே நம் மீதுள்ள தன்னம்பிக்கை போய்விடும். நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க பற்களை நன்கு சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். தினசரி பல் துலக்கி முறையாக பற்களை சுத்தம் செய்யாவிட்டால், பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்து நோய்களை ஏற்படுத்த கூடும். பல மருத்துவர்களும் காலை மற்றும் இரவு இரண்டு நேரமும் பல் துலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் பெரும்பாலோனோர் காலையில் மட்டும் பல் துலக்குகின்றனர். காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது என்றாலும் நிபுணர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | முடி ரொம்பவே குட்டியா இருக்கா? அப்போ இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்துங்க

நிபுணர்களின் கருத்து

பற்களை நன்கு சுத்தமாக வைத்திருக்க நாள் ஒன்றுக்கு காலை மற்றும் இரவு என இரண்டு முறை பல் துலக்குவது மிகவும் முக்கியம். காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன்பு என இரண்டு வேலை பற்களை துலக்க வேண்டும். பலரும் காலையில் மட்டும் பல் துலக்கிவிட்டு இரவு செய்வதில்லை. ஆனால் இரவில் துலக்குவது பரிந்துரைக்கப்படுகிறது, காரணம் இரவில் தூங்கும் போது அதிக நேரம் வாய் மூடியபடி இருக்கும். இந்த சமயத்தில் பற்களில் பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் குவியத் தொடங்குகின்றன. இதன் காரணமாக பற்கள் மற்றும் ஈறுகளில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் பல பிரச்சனைகளின் ஆபத்தும் அதிகரிக்கிறது. எனவே, காலை மற்றும் இரவு என இரண்டு நேரமும் பல் துலக்க வேண்டும்.

உங்களால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பல் துலக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்தால் இரவில் பல் துலக்க வேண்டும். காரணம் நாள் முழுவதும் நாம் சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பிற பொருட்கள் இரவில் நீண்ட நேரம் நம் பற்களுக்குள் ஒட்டி கொண்டு இருக்கும், இது பற்களில் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வாய் துர்நாற்றம் மற்றும் வாய் ஆரோக்கியம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதை தடுக்க இரவில் பல் துலக்குவது நல்லது. காலையில் எழுந்ததும் பல் துலக்குவது எவ்வளவு முக்கியமோ அத போல இரவில் பல் துலக்குவதும் முக்கியம் என்று அறிவுறுத்துகின்றனர். 

இரவில் வாய் மூடியிருக்கும் நிலையில் பாக்டீரியாவின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, நிபுணர்களின் கூற்றுப்படி பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்து இருக்க நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதே போல டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட் புதிதாகவும் தரமானதாக இருக்க வேண்டும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றுவது நல்லது. மேலும் பாஸ்ட் புட், சோடா, குளிர் பானங்கள், டீ மற்றும் காபி போன்றவற்றை குறைத்து கொள்ள வேண்டும். இவைதான் பற்களின் நிறம் மாறுவதற்கு காரணமாக உள்ளன. மேலும் வாய் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அத போல நேரம் இருக்கும் போது பல் மருத்துவர்களிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொள்வதும் நல்லது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரு துண்டு வாழை தண்டு போதும்.. மொத்த நோயும் விறுவிறுவென்று ஓடிவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News