Benefits Of New Tax Regime: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், வரி செலுத்துவோர் மனதில், எந்த வரி முறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் எழும். ஒருபுறம், பழைய வரி முறையில், பல விலக்குகள் வழங்கப்படுகின்றன.
மறுபுறம், புதிய வரி முறையின் மூலம் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. உதாரணமாக, 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. இது தவிர, புதிய வரி விதிப்பில் சில நன்மைகளும் உள்ளன.
அதில், புதிய வரி முறையின் 4 நன்மைகளை இங்கு காணலாம். இதுகுறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு, வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு வரி முறையைத் தேர்வு செய்யலாம்.
புதிய வரி முறை
புதிய வரி விதிப்பு முறைக்கு அதிகமான மக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதனால்தான், புதிய வரி விதிப்பு முறையிலும் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வரிமுறையில் 6 வரி அடுக்குகள் உள்ளன. இதில், 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இதன் பிறகு, ஒவ்வொரு 3 லட்ச ரூபாய்க்கும் 5 சதவீத வரி உயர்த்தப்படுகிறது.
நிலையான விலக்கு
முன்னதாக, பழைய வரி முறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே நிலையான விலக்கு கிடைத்தது. இப்போது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களும் அதன் பலனைப் பெறுவார்கள். வரி செலுத்துவோர் நிலையான விலக்கு ரூ. 50 ஆயிரம் பெறுவார்கள். அதாவது ரூ.3 லட்சம் மற்றும் ரூ.50,000 வரை எந்த ஆவணமும் இல்லாமல் விலக்கு அளிக்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர் ரூ.15,000 வரை நிலையான விலக்கு பெறலாம்.
விலக்கு வரம்பு அதிகரித்துள்ளது
புதிய வரி முறையில், அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.2.50 லட்சமாக இருந்தது. அதாவது ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டுள்ளனர். பழைய வரி விதிப்பில், இந்த விலக்கு ரூ.2.50 லட்சம் வரை மட்டுமே.
7 லட்சம் வரை வரிவிலக்கு
புதிய வரி விதிப்பில், 3 லட்சம் வரையிலான வருமானம் வரி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நபரின் வருமானம் 7 லட்சத்தை எட்டவில்லை என்றாலும், அவர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதுமட்டுமின்றி, ஸ்டாண்டர்ட் டிஸ்கஷனையும் சேர்த்தால், 7.50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரியில்லை.
இருப்பினும், இதற்கு மேல் வருமானம் ஈட்டினால், வரி அடுக்கின்படி வரி செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ. 7.5 லட்சம் வரை வரி இல்லை, ஆனால் 7.5 லட்சத்திற்குப் பிறகு, 3 லட்சத்துக்குப் பிறகு வரி அடுக்குகளில் இருந்து வரிக் கணக்கீடு தொடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ