அயோத்தி ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்படுகிறது. அயாேத்தியில் இந்த கோயில் திறக்கப்படும் அதே நேரத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ராமர் காேயில் கும்பாபிஷேக விழா:
உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷெக விழா வரும் 22ஆம் தேதி (ஜனவரி 2024) பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. இந்த கோயில் திறப்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை:
ராமர் காேயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று மதியம் 2:30 மணி வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ராமர் கோயில் திறப்பின் போது அரை நாளிற்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறையா?
அரசு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், நகர்புற மற்றும் கிராமப்புற வங்கிகள், என அனைத்திற்கும் ராமர் கோயில் திறப்பு விழா அன்று அரை நாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை ஜனவரி 18ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அனைத்து அரசு அலுவலகங்கள் போலவே, வங்கிகளும் ஜனவரி 22ஆம் தேதியன்று 2:30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.
பணியாளர் மற்றும் பயிற்சி துறை (DOPT)வெளியிடிட்ருந்த அறிக்கையில், பணியாளர்கள், ‘பிரான் பிரதிஷ்டா’விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவின் போது அனைத்து மாநிலங்களில் இருப்பவர்களும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
16 நாட்கள் விடுமுறை:
ஜனவரி மாதத்தில் மட்டும், சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறைகளுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறைகள், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களின் உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி மாறுபடும். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது? நீங்கள் அறியாத தகவல்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ