Food:இதென்ன கொடுமை சார்! இட்லி தோசைக்கு வந்த சோதனை!

இட்லி, தோசை பிரியர்களுக்கு இது கெட்ட செய்தி…. சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி மற்றும் தோசை மாவுப் பொடி மற்றும், ஈர மாவின் விலை அதிரடியாக உயர்கிறது. விலை உயர்வுகான உபாயத்தை செய்திருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில். இனிமேல் ரெடிமேட் இட்லி, தோசை மாவு பொடி பாக்கெட் மற்றும் அரைத்து ஈரமாக கிடைக்கும் மாவுகளுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 06:54 PM IST
  • இட்லி தோசைக்கு வந்த சோதனை!
  • ரெடிமேட் இட்லி தோசை மாவுக்கு 18% ஜி.எஸ்.டி
  • அரைத்த இட்லி மாடுக்கு 5% ஜி.எஸ்.டி
Food:இதென்ன கொடுமை சார்! இட்லி தோசைக்கு வந்த சோதனை! title=

இட்லி, தோசை பிரியர்களுக்கு இது கெட்ட செய்தி…. சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி மற்றும் தோசை மாவுப் பொடி மற்றும், ஈர மாவின் விலை அதிரடியாக உயர்கிறது. விலை உயர்வுகான உபாயத்தை செய்திருக்கிறது ஜி.எஸ்.டி கவுன்சில். இனிமேல் ரெடிமேட் இட்லி, தோசை மாவு பொடி பாக்கெட் மற்றும் அரைத்து ஈரமாக கிடைக்கும் மாவுகளுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.  

அதுமட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு அடித்தளம் இடும் சிறுதானியங்களான கம்பு, ராகி, கோதுமை மற்றும் பல்வேறு தானியங்கள் என 49 பொருட்களுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டது.  

தூள் வடிவில் விற்கப்படும் ரெடி-டு-குக் இட்லி - தோசை மாவுக்கு 18 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி  பொருந்தும். ஆனால் அரைத்து ஈரமாவு வடிவத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் ஐந்து சதவிகிதம் தான் என்று நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. 

Also Read | மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!

இந்த வரி அதிகரிப்பை எதிர்த்து,  கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்புகள் (Krishna Bhavan Foods and Sweets) நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. ஏஏஆர் எனப்படும், Advance Decision Authority அமைப்பின் தமிழ்நாடு பெஞ்சில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

 தினை, கம்பு, ராகி மற்றும் மல்டி கிரெயின் மாவு கலவை போன்ற 49 பொருட்களுக்கு பொருந்தும் ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க கோரி கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த அமர்வு, கிருஷ்ணா நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்கள் தூள் வடிவில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் எனவே 18% ஜி.எஸ்.டியே பொருந்தும் என்று கூறிவிட்டது.  

Also Read | பாலியல் ஆரோக்கியத்திற்கு சமையலறையின் இந்த ‘5’ மசாலாக்கள் போதும்..!

இது தொடர்பாக விளக்கம் அளித்த AAR, இந்த 49 பொருட்களும் CTH 2106 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தோசை மிக்ஸ் மற்றும் இட்லி பொடி பேக்கேஜ் செய்யப்பட்ட கலவையாக விற்கப்படுகிறது, இத்துடன் தண்ணீர்/வெந்நீர் /தயிர் கலந்து ஈரமான கலவை உருவாக்கி உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அரைத்து ஈரமான நிலையில் விற்கப்படும் இட்லி-தோசை மாவுக்கு 5% மட்டும் தான் வரி என்றும் மேல்முறையீட்டை விசாரித்த அமர்வு தெரிவித்துவிட்டது. 

ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்ட 49 தயாரிப்புகளும் CTH 2106 இன் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு மத்திய ஜிஎஸ்டி (CGST) ஒன்பது சதவீதம் மற்றும் மாநில ஜிஎஸ்டி ஒன்பது சதவிகிதம் (SGST) என்பது தான் பொருந்தக்கூடிய விகிதம் ஆகும்.
எனவே இனிமேல் இட்லி மற்றும் தோசைக்கான மாவை வீட்டிலேயே அரைத்துக் கொள்வது நல்லது.

Also Read | Benefits of lemon: எலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News