SBI அளிக்கும் இந்த offer-ல் கார் வாங்கினால், பல சலுகைகள் பல நன்மைகள்….

இந்த பண்டிகை காலங்களில் நீங்கள் கார் வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதற்னான அருமையான வாய்ப்பையும் கவர்ச்சிகரமான சலுகைகளையும் உங்களுக்காக கொண்டு வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2020, 03:31 PM IST
  • SBI Yono மூலம் அதிக தள்ளுபடி விலையில் கார் கடன் கிடைக்கும்.
  • SBI-ன் இந்த சலுகையின் கீழ், நீங்கள் SBI யோனோ மூலம் காரை முன்பதிவு செய்தால், 7.50% வட்டி விகிதத்தில் கார் கடன் பெறுவீர்கள்
  • வாகனத்தின் சர்வீஸ், விற்பனை அல்லது அம்சங்கள் குறித்த புகார்களுக்கு வங்கி பொறுப்பேற்காது.
SBI அளிக்கும் இந்த offer-ல் கார் வாங்கினால், பல சலுகைகள் பல நன்மைகள்…. title=

இந்த பண்டிகை காலங்களில் (Festival Season) நீங்கள் கார் வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதற்னான அருமையான வாய்ப்பையும் கவர்ச்சிகரமான சலுகைகளையும் உங்களுக்காக கொண்டு வந்துள்ளது. SBI யோனோ (SBI Yono) மூலம் நீங்கள் Ford Endeavour Sport-ஐ முன்பதிவு செய்தால், ரூ .22113 வரையிலான கார் உதிரி இணை பாகங்களை (accessories) இலவசமாகப் பெறலாம். இதனுடன், நீங்கள் அதிக தள்ளுபடி விலையில் கார் கடனையும் பெறுவீர்கள்.

ALSO READ: தீபாவளிப் பரிசாக மிக மலிவான Home loan-களை அளிக்கும் 8 வங்கிகளின் பட்டியல் இதோ

கார் கடனுக்கு எந்த செயலாக்க கட்டணமும் விதிக்கப்படாது

SBI-ன் இந்த சலுகையின் கீழ், நீங்கள் SBI யோனோ மூலம் ஒரு காரை முன்பதிவு செய்தால், 7.50% வட்டி விகிதத்தில் கார் கடன் (Car Loan) பெறுவீர்கள். அதே நேரத்தில், பண்டிகைகளுக்கான மகிழ்ச்சிப் பரிசாக கார் கடனுக்கான செயலாக்க கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை வங்கி வழங்குகிறது. SBI யோனோ மூலம் கடன் பெற விண்ணப்பித்தவுடன் கடனுக்கான உடனடி ஒப்புதல் கிடைக்கும்.

இந்த வகையில் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இந்த சலுகையைப் பயன்படுத்த, முதலில் நீங்கள் SBI யோனோவில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்த பிறகு, நீங்கள் ‘Shop and order’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் ஒரு ஆட்டோமொபைல் ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்தால், ஃபோர்டின் காரை (Ford Car) முன்பதிவு செய்வதற்கான ஆப்ஷனைப் பெறுவீர்கள்.

இந்த விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்

வாகனத்தின் சர்வீஸ், விற்பனை அல்லது அம்சங்கள் குறித்து வாடிக்கையாளருக்கு எந்தவிதமான புகார் இருந்தாலும், அதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்று வங்கி தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு காரை விற்கும் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும்.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News