Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே

அமேசான் மற்றும்  ஃபிளிப்கார்ட் போன்ற முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2021, 05:16 PM IST
  • இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது.
  • அமேசான் ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பல மின்னணு தயாரிப்புகளுக்கு பெரிய தள்ளுபடி சலுகைகளை வழங்கும்.
  • ஃபெஸ்டிவல் சேலின் போது கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் மற்றும் டீல்கள் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே கிடைக்கும்.
Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே title=

Amazon Great Indian Festival sale: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களும் தங்கள் தளங்களில் ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளன. அமேசான் சமீபத்தில் தனது வருடாந்திர கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Annual Great Indian Festival sale) பற்றி அறிவித்தது.

அமேசான் (Amazon) கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அமேசான் ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பல மின்னணு தயாரிப்புகளுக்கு பெரிய தள்ளுபடி சலுகைகளை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ டீஸர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

பழைய மற்றும் புதிய ஐபோன் (iPhone) மாடல்கள் பெரிய தள்ளுபடி சலுகைகளுடன் கிடைக்கும் என்பதையும் அமேசானின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளிப்படுத்தியது. Flipkart இன்னும் பெரிய தள்ளுபடி சலுகைகளைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டும் விற்பனை தளங்களும் விற்பனை தேதிகளை வரும் நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தளங்களின் டீல்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ALSO READ: நம்ப முடியாத விலையில் iPhone 12, iPhone 12 mini: Amazon, Flipkart-ல் அதிரடி சலுகை, தள்ளுபடி

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் அமேசான் எச்டிஎஃப்சி வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் சேலில் கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் HDFC வங்கி (HDFC Bank) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங்கில் உடனடி தள்ளுபடியை பெற முடியும். கூடுதலாக, EMI பரிவர்த்தனைகளிலும் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேலும், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலின் போது கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் மற்றும் டீல்கள் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே கிடைக்கும். அமேசானின் பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெற, நீங்கள் மூன்று மாதங்களுக்கு 329 ரூபாயும், ஒரு வருடத்திற்கு 999 ரூபாயும் செலுத்த வேண்டும். சந்தாவைப் பெற அமேசான் பிரைம் இணையதளத்திற்குச் செல்லவும்.

இந்த சேலின் போது, ​​அமேசான் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ், நெக் பேண்ட்ஸ், செக்யூரிட்டி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களில் பெரும் தள்ளுபடியை வழங்கும். இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஃபயர் டிவி ஸ்டிக், எக்கோ சாதனங்கள் போன்ற தனது சொந்த தயாரிப்புகளுக்கும் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கும்.

ALSO READ: Amazon அதிரடி: வெறும் ரூ. 649-க்கு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், முந்துங்கள்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News