பல ஆண்டுகளாக சமையல் செயல்முறை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது அல்லவா? கையால் சமையல் வேலைகளை செய்வதிலிருந்து நேரத்தைச் சேமிக்க உதவும் உபகரணங்களைச் சார்ந்து இருப்பது வரை பல விஷயங்கள் மாறி உள்ளது. சமையலறை உபகரணங்களைப் பற்றி பேசுகையில், பிரஷர் குக்கர் என்பது இன்றைய முக்கிய தேவையாகிவிட்டது. அது இல்லாமல் சில உணவுகளை சமைப்பதை மிகவும் எளிமை ஆக்குகிறது. இது சமையல் செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதில் சில உணவுகளை சமைப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சில உணவுகள், பிரஷர் குக்கரில் சமைக்கும்போது, உங்கள் உணவின் சுவையை அழித்துவிடும். யார் அதை விரும்புகிறார்கள், இல்லையா? பிரஷர் குக்கரில் நீங்கள் சமைப்பதைத் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுகளின் பட்டியலை இங்கே தருகிறோம்.
மேலும் படிக்க | 10 நாளில் தொப்பையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்
பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்:
1. அரிசி
அரிசி சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துபவர் என்றால், நிறுத்த வேண்டிய நேரம் இது. அரிசியில் உள்ள மாவுச்சத்து, அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தை வெளியிடுவதற்கு காரணமாகிறது. இது சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் முடிந்தவரை நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒன்று. எனவே, அரிசியை ஆவியில் வேகவைப்பது அல்லது கடாயில் சமைப்பது நல்லது.
2. உருளைக்கிழங்கு
சப்ஜி மற்றும் கறி சமைக்க தேவையான உருளைக்கிழங்கை வேகவைக்க நம்மில் பெரும்பாலோர் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறோம் . ஆனால் அரிசியைப் போலவே உருளைக்கிழங்கிலும் அதிக அளவு மாவுச்சத்து இருப்பதாக அறியப்படுகிறது. அதனால்தான் அவற்றை ஒரு பிரஷர் குக்கரில் வேகவைப்பது அல்லது சமைப்பது அவ்வளவு சிறந்த யோசனையல்ல. சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்த இது நிச்சயமாக உதவும், ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
3. பாஸ்தா
பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டிய மற்றொரு உணவுப் பொருள் பாஸ்தா. சிலர் அதை ஒரு பாத்திரத்தில் வெறுமனே வேகவைக்கிறார்கள், ஆனால் அதற்கு பிரஷர் குக்கரைப் பயன்படுத்த விரும்பும் பலர் உள்ளனர். பாஸ்தாவும் அதிக மாவுச்சத்து உள்ளதால் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடும். சிறந்த முடிவுகளுக்கு, நீங்கள் எப்போதும் ஒரு பாத்திரத்தில் சமைக்க வேண்டும்.
4. கிரீமி பேஸ் கொண்ட எதையும்
கிரீமி பேஸ் கொண்ட கறிகளை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். பிரஷர் குக்கரில் சமைக்கும் போது பால் அல்லது சீஸ் போன்ற பால் பொருட்கள் சுருண்டுவிடும். சமையலின் முடிவில் பால் பொருட்களைச் சேர்ப்பது அல்லது முற்றிலும் வேறு சமையல் முறைக்கு மாறுவது நல்லது.
5. மீன்
பிரஷர் குக்கரில் மீன் சமைப்பது ஆரோக்கியமானதல்ல என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. மீன் மிகவும் மென்மையானது, மேலும் அதை குக்கரில் கறி வடிவில் சமைத்தால் நன்மை இருக்காது, இதனால் மீன்கள் அதன் சுவையை இழந்து உலர்ந்து போகலாம். இது நாம் நிச்சயமாக விரும்பாத ஒன்று. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரப்பதம் இல்லாத மீன்களை யார் சாப்பிட விரும்புகிறார்கள்? எனவே, இந்த உணவுகளைப் பற்றி இப்போது உங்களுக்குத் தெரியும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அவற்றை பிரஷர் குக்கரில் சமைப்பதைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: வட்டியிலேயே ஜாக்பாட் வருமானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ