7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2022, 06:04 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வரக்கூடும்.
  • கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
  • இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி title=

7வது ஊதியக்குழு: 18 மாத அகவிலைப்படி (டிஏ) அரியர் தொகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வரக்கூடும். ஊடகங்களில் வரும் செய்திகள், இதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.  

ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்குவதில் அரசாங்கம் உறுதியளிப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மீட்டெடுக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் இந்த காலத்திற்கான நிலுவைத் தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை.

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இதனால் ஏழைகளுக்கு உதவ அரசாங்கம் அந்த பணத்தை பயன்படுத்தியது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஜெசிஎம்-ன் தேசிய கவுன்சிலின் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா தரப்பில் கூறப்பட்ட சில செய்திகளும் சில தகவல்களை அளித்தன. கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும், ஆனால், இரு தரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் இன்னும் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு 

அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே செட்டிமெண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என  தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

ஜெசிஎம்-ன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி ஒரு ஒரு ஜீ மீடியா அறிக்கை, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், லெவல்-13 (7வது ஊதியக்குழு அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும். 

செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission நல்ல செய்தி: டிஏ அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News