7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ்

7th Pay Commission Update: மத்திய அரசு மீண்டும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளிக்கக்கூடும். அகவிலைப்படிக்கு பிறகு மற்றொரு கொடுப்பனவில் இப்போது அதிகரிப்பு அறிவிக்கப்படலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2022, 10:38 AM IST
  • மத்திய பணியாளர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி.
  • HRA ஐ அதிகரிக்க பரிசீலனை செய்யப்படுகிறது.
  • இந்த மாதம் அறிவிக்கப்படலாம்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு  காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ் title=

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் 3% உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்புக்குப் பிறகு ஊழியர்களின் டிஏ 31% இல் இருந்து 34% ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது மோடி அரசாங்கம் ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை அளிக்கத் தயாராக உள்ளது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, இப்போது வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அகவிலைப்படி 3% உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத சம்பளத்துடன், உயர்த்தப்பட்ட டிஏ பலனும் ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. இதனுடன், இப்போது வீட்டு வாடகை கொடுப்பனவும் விரைவில் அதிகரிக்கப்படக்கூடும். 

எச்ஆஹ்ஏ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, எச்ஆர்ஏ அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எச்ஆஹ்ஏ அதிகரிக்கப்பட்டது. அப்போது டிஏவும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்போது டிஏ 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், எச்ஆர்ஏ-வையும் அரசு திருத்தலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission அதிர்ச்சி செய்தி: டிஏ அதிகரிப்பில் தடை வரக்கூடும், காரணம் இதுதான் 

எச்ஆஹ்ஏ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது

இப்போது அரசு ஊழியர்களுக்கு எச்ஆஹ்ஏ எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் 'எக்ஸ் (X)' பிரிவின் கீழ் வருகின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், 'ஒய் (Y)' பிரிவில் வருகின்றன. மேலும் 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'Z' பிரிவின் கீழ் வருகின்றன. மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச எச்ஆஹ்ஏ ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கும்.

எச்ஆஹ்ஏ எவ்வளவு அதிகரிக்கக்கூடும்

பணியாளரின் எச்ஆஹ்ஏ அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையால் தீர்மானிக்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, X வகை நகரங்களில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களின் எச்ஆஹ்ஏ 3 சதவிகிதம் அதிகரிக்கும். தற்போது, ​​இந்த நகரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ பெறுகின்றனர். Y வகை நகரங்களுக்கு 2 சதவீதம் ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு சாத்தியமாகும். தற்போது, ​​இந்த பணியாளர்களுக்கு 18-20 சதவீதம் ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. Z வகை நகரங்களுக்கு 1 சதவீதம் அதிகரிக்கலாம். அவர்களுக்கு தற்போது 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் Y வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்ந்த பிறகு ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, முழு கணக்கீடு இதோ

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News