Chennai Lifestyle News: சென்னை என்றாலே அது வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்பார்கள். அப்படியான இந்த ஊரில் பட்ஜெட் விலையில் வாழ்பவர்களில் இருந்து ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் வரை அனைத்து வகை மக்களுக்குமான ஊராக இருக்கிறது. அதிலும் சென்னையின் மால்களை இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் ஆடம்பர வாழ்க்கை முறைக்கான முதன்மையான இடமாக விளங்குகிறது. பீனிக்ஸ் மால் சென்னை நகரத்தின் மிகவும் வசதியான மற்றும் அதிநவீன மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்குமான பிரத்யேக இடமாக திகழ்கிறது. அதன் பிரம்மாண்டமான சர்வதேச தோற்றமும், நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட உட்புறங்களும் சிறப்புமிக்கவை.
பீனிக்ஸ் மாலின் சிறப்புகள்
உலகெங்கிலும் உள்ள சிறந்த உணவு, ஆடைகள், பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த மால் சென்னையில் மிக விரிவான மற்றும் கவர்ச்சிகரமான வாழ்க்கை முறை ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. கடைகள் சர்வதேச, தேசிய மற்றும் பிராந்திய விலை உயர் பிராண்டுகளின் விரிவான கலவையை கொண்டுள்ளது.
சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி என்பது ஒரு சாதாரண மாலை விட பெரியதாகும்; இது கண்கவர் கலாச்சாரங்கள், அழகான உடைகள் மற்றும் உயர்தர ஆடைகளின் சங்கமம் என்றும் கூறலாம். ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேர ஆப்ஷன்களில் முதன்மையான ஒன்று.
பலேடியத்தின் சிறப்புகள்
பலேடியம் ஷாப்பிங் மாலும் பீனிக்ஸை ஒட்டியே அமைந்துள்ளது. இது உயர்தர, ஆடம்பரமான ஷாப்பிங் மால் ஆகும். இந்த வளாகம் அதன் தனித்துவமான கட்டடக்கலைக்கு சான்று. பிரமிப்பை தரும் பல்லேடியம் மால் சில்லறை வணிகங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு தேவையான பிற வணிகங்களின் கலவையாகும். குறிப்பாக, 70 சில்லறை விற்பனையாளர்கள் இங்கு உள்ளனர். உயர் ரக ஃபேஷன் நிறுவனங்களுடன் கூடுதலாக பல்வேறு விதங்களில் கஃபேக்கள், சிறந்த உணவகங்கள், சலூன்களும் உள்ளன.
ஷாப்பிங் திருவிழா
இந்நிலையில் சென்னையின் மிகப்பெரிய பிரீமியம் ஷாப்பிங் மால்களான ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியத்தில், பொது மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9வது ஆடம்பர ஷாப்பிங் திருவிழாவை பிரபல நடிகை அக்ஷரா ஹாசன் கடந்த சனிக்கிழமை (ஜூலை 6) அன்று திறந்துவைத்தார்.
40% தள்ளுபடி
இந்தியாவின் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழாவாக அறியப்படும் "லக்சுரி ஷாப்பிங் ஃபெஸ்டிவல்" ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை உயர்தர பிராண்ட்களான மைக்கேல் கோர்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கேட் ஸ்பேட், டியூன் லண்டன், லேபிள் ரிது குமார், சூப்பர் ட்ரை, கெனாலி, ஸெஃபோரா மற்றும் புரூக்ஸ் பிரதர்ஸ் ஆகியவற்றில் 40 சதவீதம் வரை பிரத்யேக தள்ளுபடிகள் கிடைக்கும். ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியத்தில் உள்ள கடைகளில் நம்பமுடியாத சலுகைகளுடன் கொண்டாட்டம் நிறைந்த மாலை நேரங்களில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ