11:39 19-05-2018
அனைத்து ஊடகங்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்து கொள்ளலாம் என்றும், வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் சட்டப்பேரவையில் நடக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
11:15 19-05-2018
சட்டமன்ற நிகழ்வுகளை 11 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதற்காக, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள் பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்பிக்கை ஓட்டுடெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்க உள்ளனர்.
இதற்காக கர்நாடக சட்டசபை காலை 11 மணிக்கு கூட உள்ளது. முதலில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,க்களும், பின்னர் மற்ற கட்சிகளின் எம்எல்ஏ.,க்களும் பதவியேற்க உள்ளனர். சபாநாயகருக்கு எதிரான வழக்கு விசாரணை, நம்பிக்கை ஓட்டெடுப்பு, எம்எல்ஏ.,க்கள் பதவியேற்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக கர்நாடக சட்டசபை அமைந்துள்ள பகுதியை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Visuals of security outside Vidhana Soudha in Bengaluru. #FloorTest to be held at 4 pm today. #KarnatakaElection2018 pic.twitter.com/sfA8STkMt7
— ANI (@ANI) May 19, 2018