வெற்றி கொண்டாட்டத்தில் ஆட்டோ ஓட்டிய CSK அணியினர்! வீடியோ!

மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி மகிழ்வது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது!

Last Updated : May 29, 2018, 04:07 PM IST
வெற்றி கொண்டாட்டத்தில் ஆட்டோ ஓட்டிய CSK அணியினர்! வீடியோ! title=

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து, வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாவது இடம் பெற்ற ஐதராபாத் அணிக்கு 12.5 கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கொண்ட்டாட்ட வீடியோ தற்போது சமூக வல்தளைங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக  ஆட்டோ ஓட்டி மகிந்துள்ளார். 

 

#CSK celebration

A post shared by Prëët @kamal_k_s1807) on

 

Trending News