உலகப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள இயக்குநர் சேகர் கபூர், பிரிட்டிஷ் தேசிய விருதுகளில் 'வாட்ஸ் லவ் காட் டூ இட்' படத்திற்காக 'சிறந்த இயக்குநர்' விருதை வென்றுள்ளார். இந்தத் திரைப்படம் சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றது. இப்படம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வெளியானது.
விருது கிடைத்தது தொடர்பாக, சமூக ஊடகமான இஸ்டாகிராமில் சேகர் கபூர் பதிவிட்டுள்ளார்
“இந்த எதிர்பாராத மரியாதைக்கு @nationalfilmawards நன்றி. ஆனால் இந்த விருது உண்மையில், இந்த திரைப்படத்தில் பணியாற்றி அனைத்து குழுவினருக்கும் சொந்தமானது ... இயக்குனருக்கு கிடைக்கும் விருது என்பது திரைப்படக் குழுவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்குமானது” என்று ஷேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!
ஷேகர் கபூரின் திரைப்படங்கள் உலக அளவில் பேசப்படுபவை. எலிசபெத்: தி கோல்டன் ஏஜ் (Elizabeth: The Golden Age) ஆஸ்கார் விருது வென்றது.
கேட் பிளான்செட், எடி ரெட்மெய்ன் மற்றும் ஹீத் லெட்ஜர் போன்ற நடிகர்கள் பிரபலமாவதற்கு முன்பே, அவர்களது திறமையை கண்டறிந்து, சேகர் கபூர் அவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில், IGF ஐக்கிய ராஜ்ஜியம்-இந்தியா விருதுகளில் ,சேகர் கபூருக்கு 'ஐக்கிய ராஜ்ஜியம்-இந்தியா உறவுகளுக்கான வாழ்நாள் பங்களிப்பு' சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IRCTC பயண காப்பீடு... 35 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு... முழு விபரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ