தனது டிவிட்டர் கணக்கை ட்விட்டர் 1 மணி நேரம் முடக்கி வைத்ததாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். இது அப்பட்டமான சட்ட மீறல் என்று அவர் கூறுகிறார்.
மோடி அரசாங்கத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கணக்கை, மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் சுமார் 1 மணி நேரம் முடக்கியது. ட்விட்டர் இது குறித்த தகவலை தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
கூ (Koo) சமூக வலைதளத்தில் இது குறித்த இந்த தகவலைப் பகிர்ந்துகொண்ட ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை ட்விட்டர் மீறியுள்ளதாக தெரிவித்தார். ட்விட்டரின் இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஐ மீறுவதாகவும் பிரசாத் கூறினார். இந்த விதிமுறைகளின்படி, கணக்கை அணுக மறுக்கும் முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
Also Read | புதிய IT விதிகளை ஏற்றுக் கொள்ள தயார் என்கிறது பேஸ்புக், டிவிட்டர் மவுனம்
நாட்டின் புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த டிவிட்டருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை இதன் காரணமாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் நிறுவனம் ஒரு மணி நேரம் முடக்கியது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த் தனது கணக்கை இன்று திறந்த போது, அவரால் அதை இயக்க முடியல்லை. ட்விட்டரின் இந்த நடவடிக்கை, பயனர்களின் சுதந்திரமான பேச்சுக்குத் தடையாக இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
புதிய விதிகளின் கீழ், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய அல்லது, தேச விரோத கருத்துக்கள் அல்லது போலி செய்திகளுக்கு. பதிவிட்ட நபர் மட்டுமல்லாது, அந்த சமூக ஊடக தளம் மீது வழக்கு பதியலாம். அதோடு, போலி செய்திகள் அல்லது நாட்டின் இறையாண்மை அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தகவல்கள் பகிர்ந்த நபர் குறித்த தகவல்களை சமூக ஊடகம் அளிக்க வேண்டும்.
Friends! Something highly peculiar happened today. Twitter denied access to my account for almost an hour on the alleged ground that there was a violation of the Digital Millennium Copyright Act of the USA and subsequently they allowed me to access the account. pic.twitter.com/WspPmor9Su
— Ravi Shankar Prasad (@rsprasad) June 25, 2021
"இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" பாதிக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை, பதிவுகளை தடை செய்ய வேண்டும் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் தனது மனம் போன போக்கில் இயங்குகிறது. அதன் விதிகளைப் பின்பற்றாவிட்டால், உங்கள் கணக்கிற்கான அணுகலை அவர்கள் மறுப்பார்கள். எந்த சமூக ஊடக நிறுவனம் என்ன செய்தாலும் சரி, அனைவரும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Also Read | Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR