நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள ஏதுவாக அடுத்த மாதம், அதாவது மார்ச் மாதத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, அயோத்தி, வாரணாசி, ஜசிதி, கயா, கங்காசாகர், ஜகந்நாத்புரி, கோனார்க் விஷ்ணுபாத் கோயில், கயா ஆகிய இடங்களுக்கு சிறப்பு பாரத தர்ஷன் ரயிலை ஐஆர்சிடிசி இயக்கும்.
மேலும் படிக்க | அதானி மற்றும் ஜீ இடையே பண பரிமாற்றம் பற்றிய வதந்திகளில் உண்மை இல்லை!
ஐஆர்சிடிசி கடந்த பல மாதங்களாக 'தேகோ அப்னா தேஷ் யோஜனா' திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு மத மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் கயா விஷ்ணுபாத் கோயிலுக்கும் செல்ல முடியும். இதற்காக நேரம் மற்றும் ரயில் பயண அட்டவணையை ஐஆர்சிடிசி வகுத்துள்ளது.
மேலும், சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்டில் உள்ள ஜசிதிக்கு சென்று, தியோகரில் உள்ள வைத்தியநாத் கோயிலுக்குச் செல்வதற்கான ஏற்பாட்டையும் இந்திய ரயில்வே மேற்கொள்கிறது. ஏற்கனவே கூறியதுபோல், 'தேகோ அப்னா தேஷ்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் இந்த ரயில்கள் ஒருபுறம் மேற்கு வங்காளத்தில் உள்ள கங்காசாகரை அடையும். மறுபுறம், ஒடிசாவின் பூரியில் அமைந்துள்ள ஜகன்னாதர் கோயிலையும், கோனார்க்கின் சூரியக் கோயிலையும் அடையும்.
மேலும் படிக்க | ஹிஜாப்: மாணவிகளின் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR