சிம்லா: இமாச்சலப் பிரதேசம் கின்னாரில் மலையின் ஒரு பகுதி சாலையில் விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 5இல் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கின்னாரில் உள்ள கிஷாங் நாலா அருகே நடந்ததுள்ளது. மலையின் ஒரு பகுதியிலிருந்து விழுந்த பின்னர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் சென்றவர்கள் சிலர் மலை இடிந்து விழும் காட்சியை காணோளியாக பதிவு செய்துள்ளனர். அதில் நெடுஞ்சாலை முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்ப்படவில்லை. நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
#WATCH Himachal Pradesh: Traffic on National Highway 5 blocked after a portion of the mountain fell on the road near Kashang Nala in Kinnaur, today. pic.twitter.com/BCzylTewGT
— ANI (@ANI) June 25, 2019