போக்குவரத்து விதிமீறல்களுக்காக சலானை அதிகரித்த இந்த மாநிலம்....

இரு சக்கர வாகனத்தில் மூன்று பயணிகள் காணப்பட்டால் ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும்.

Last Updated : Aug 1, 2020, 04:35 PM IST
    1. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் Horn ஐ பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ .1,000 ஆகவும், இரண்டாவது முறையாக ரூ .2,000 ஆகவும் அபராதம் இருக்கும்.
    2. தீயணைப்பு படை அல்லது ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒருவர் இடையூறு விளைவித்தால், அவர்களுக்கு ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும்.
    3. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் 14 வயதுக்கு குறைவானவர்கள் ரூ .5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்காக சலானை அதிகரித்த இந்த மாநிலம்.... title=

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீட் பெல்ட் இல்லாத நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது முந்தையதை விட இரு மடங்கு அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் அதிகரிக்கும் வகையில் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ .500 முதல் ரூ .1000 வரை அபராதம் இரட்டிப்பாகியுள்ளது. இதேபோல், அரசு அதிகாரியின் பணியில் தடையாக இருந்தால், அபராதம் முந்தைய ரூ .1,000 ல் இருந்து ரூ .2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, ”என்று போக்குவரத்து முதன்மை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ALSO READ | மோட்டார் வாகன சட்டம்: லைக்கவசம் அணியாத பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்!!

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் Horn ஐ பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ .1,000 ஆகவும், இரண்டாவது முறையாக ரூ .2,000 ஆகவும் அபராதம் இருக்கும்.

காப்பீடு இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான இப்போது முதல் முறையாக ரூ .2,000 ஆகவும், இரண்டாவது முறையாக ரூ .4,000 ஆகவும் அபராதம் இருக்கும்.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் 14 வயதுக்கு குறைவானவர்கள் ரூ .5,000 மதிப்புள்ள அபராதத்தையும், அதிவேகத்திற்கு ரூ .2,000 அபராதமும் செலுத்த வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்தில் தவறான தகவல்களை வழங்குவதற்கான அபராதம் ரூ .2,500 முதல் ரூ .10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இரு பயணிகளை இரு சக்கர வாகனத்தில் கண்டுபிடித்தால் ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும்.

 

ALSO READ | Watch Video: நடனமாடி போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் MPA மாணவி!

தீயணைப்பு படை அல்லது ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒருவர் தடையாக இருப்பதைக் கண்டால், அவர்களுக்கு ரூ .10,000 அபராதமும், பார்க்கிங் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் அபராதம் ரூ .1,500 ஆகவும், விதிமீறல் செய்பவருக்கு ரூ .1 லட்சம் விதிக்கப்படும்.

வியாழக்கிழமை இந்த அறிவிப்பை அமல்படுத்திய பின்னர், மாநிலத்தில் இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News