‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க உத்தரபிரதேச அரசு சட்டம் கொண்டு வரும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்ட, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘லவ் ஜிஹாத்தை’ கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2020, 09:17 PM IST
  • திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்ட, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.
  • 2014 ஆம் ஆண்டில் நூர் ஜஹான் பேகம் வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க உத்தரபிரதேச அரசு சட்டம் கொண்டு வரும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் title=

லக்னோ: திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்ட, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘லவ் ஜிஹாத்தை’ தடுக்க அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.

“திருமணத்திற்கு மத மாற்றம் தேவையில்லை என்று அலகாபாத் ஐகோர்ட் கூறியுள்ளது. ‘லவ் ஜிஹாத்’ ஐ கட்டுப்படுத்த அரசாங்கமும் செயல்படும், நாங்கள் ஒரு சட்டத்தை  கொண்டுவருவோம். தங்கள் அடையாளத்தை மறைத்து, பெண்களை ஏமாற்றும் நபர்களை நான் எச்சரிக்கிறேன். நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளாவிட்டால், தண்டிக்கப்படுவீர்கள், ”என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath) கூறினார்.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், தங்கள் திருமண  வாழ்க்கையில் மனைவியின் பெற்றோர் மற்றும்  காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவு  பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, அலகாபாத் (Allahabad) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். வெவ்வேறு மத்தைச் சேர்ந்த இந்த  காதல் தம்பதியினர் கடந்த ஜூலை மாதம், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், “முதல் மனுதாரர் 2020 ஜூன் 29 அன்று மதம் மாறியுள்ளார், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் ஜூலை 31, 2020 அன்று திருமணம் நடந்துள்ளது.  திருமண நோக்கத்திற்காக மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது. 

ALSO READ | அல்லாவை நிந்தித்தால் தலை துண்டிக்கப்படும் என முன்னாள் AMU மாணவரின் வெறிப்பேச்சு..!!

2014 ஆம் ஆண்டில் நூர் ஜஹான் பேகம் வழக்கை விசாரணை செய்த  உயர் நீதிமன்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில், “இஸ்லாத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அல்லது இஸ்லாத்தின் மீதான நம்பிக்கை மற்றும் புரிதல் எதுமே இல்லாமல், திருமணத்தின் நோக்கத்திற்காக  மட்டுமே மதம் மாற்றினால் அது செல்லுபடியாகுமா? அதை எப்படி ஏற்றுக் கொள்வது என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது .

ALSO READ | கொரோனாவிலும் 45,000 கோடி அன்னிய முதலீட்டை ஈர்த்து அசத்தும் முதல்வர் யோகி..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News