கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் பயிற்சியில் தோல்வியடைந்த உ.பி. போலீஸ்: VIDEO

உத்தரபிரதேச காவல்துறையினரின் பயிற்சி குறித்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2019, 01:56 PM IST
கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் பயிற்சியில் தோல்வியடைந்த உ.பி. போலீஸ்: VIDEO title=

பல்லியா: உ.பி. காவல்துறையின் துப்பாக்கிகள் பெரும்பாலும் சரியான நேரத்தில் சரியாக வேலை செய்வதில்லை. இதில் சிறப்பு என்னவென்றால், அது துப்பாக்கிகளுக்கு மட்டும் பொருந்தாது. எங்காவது ஒரு கலவரம் ஏற்பட்டாலும், அந்த கலவரத்தை அடக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை உ.பி. போலீசாரால் வீச முடியுமா? முடியாது என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் உத்தரபிரதேச காவல்துறையினருக்கு பல்லியாவில் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது. அப்பொழுது நடந்த பயிற்சியின் போது, ​​காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச முயன்றனர். ஆனால் துப்பாக்கி செயலிழந்துவிட்டது. இந்த சம்பவம் மூலம் உ.பி. போலீசாரின் செயல்திறன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

செவ்வாயன்று, உத்தரபிரதேச காவல்துறையினருக்கு பல்லியாவில் பயிற்ச்சி நடத்தப்பட்டது, அங்கு அவர்களுக்கு கலவரத்தைக் கட்டுப்படுத்தும் தந்திரங்கள் கற்பிக்கப்பட்டன. இதற்கிடையில், ஒரு போலீஸ்காரர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச முற்பட்ட போது துப்பாக்கி வேலை செய்யவில்லை. 

இந்த போலீஸ் பயிற்சியில் பங்கேற்க சுமார் 100 காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான பயற்சி அளிக்கப்பட்ட போதிலும், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசும் பயிர்ச்சியின் போது காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த பயிற்ச்சியில் காவலர்களுடன் மாவட்ட காவல் அதிகாரியும் கலந்து கொண்டனர்.

 

உத்தரபிரதேச காவல்துறையினரின் பயிற்சி குறித்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் முதலில் ஒரு காவல்துறை அதிகாரி கண்ணீர்ப்புகைக் குண்டு வீச முயற்சிக்கிறார். அவருக்கு அருகில் மூன்று போலீசார் நிற்கிறார்கள். போலீஸ் அதிகாரி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும்போது, அது தோல்வி அடைகிறது, பின்னர் மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. இந்தமுறையும் தோல்வியை சந்திக்கிறார். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி, மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக, கண்ணீர்ப்புகைக் குண்டு வீசும் பயிற்சியில் ஏமாற்றம் ஏற்பட்டது என்று கூறினார்.

Trending News