வாரணாசி: வாரணாசி மாவட்டம் பெலுபூர் பகுதியில் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், "பேய் உலவுவது" தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்களை உத்தரபிரதேச அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இவர்கள் அவுரையா மாவட்டத்தின் பண்டாவைச் சேர்ந்த தொழிலதிபரின் ஊழியரைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்களில் ஒரு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல கான்ஸ்டபிள்களும் அடங்குவர். பணிநீக்கம் செய்யப்பட்ட SHO ரமா காந்த் துபே ஆவர். சப்-இன்ஸ்பெக்டர்கள் - சுஷில் குமார், மகேஷ் குமார் மற்றும் உத்கர்ஷ் சதுர்வேதி மற்றும் கான்ஸ்டபிள்கள் - மகேந்திர குமார் படேல், கபில் தேவ் பாண்டே மற்றும் ஷிவ்சந்த் ஆகியொரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் வாரணாசி மாவட்டத்தில் உள்ள பேலுபூர் காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் துறை பணியாளர்கள்.
சுமார் ரூ. 1.4 கோடி கொள்ளை வழக்கில் தங்களின் விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இதுவரை 4 பேரை கைது செய்துள்ளதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஏழு காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர். காவல் துறை உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முதற் கட்ட விசாரணையில் போலீசார் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அவர்கள் பணியியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது.
மே 31 அன்று, பேலுபூர் பகுதியில் தனியாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.92.94 லட்சம் பணத்தை மீட்டதாக வாரணாசி போலீஸார் கூறினர். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் ஊழியர் ஒருவர் ஆயுதமேந்திய நபர்கள் கொள்ளை அடித்த சம்பவத்தில் சில நாட்களுக்கு முன் இழந்த பணம் என பின்னர் கண்டறியப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட காவலர்களில் ஒருவர் தனது பங்கில் அதிருப்தி அடைந்து குற்றம் குறித்த தகவலை வெளியிட்டார். கொள்ளையர்களில் போலீஸ்காரர்கள் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கொள்ளையில் போலீஸ்காரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் முதலில் இடை நீக்க செய்யப்பட்டும் பின்னர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | லவ் ஜிகாத்... உத்தர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய சட்டம் - முக்கியமான 5 தகவல்கள்!
முன்னதாக, செப்டம்பர் 2022 இல், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளை நிறப் பொருள் நகர்வதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பேய்கள் உலவுவதாக கூறப்படுவது குறித்து துபே ஆய்வு செய்தார். “மக்கள் மத்தியில் பேய் நடமாட்டம் குறித்த அச்சம் நிலவுகிறது. அவர்களின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்துள்ளோம், மேலும் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம், ”என்று இன்ஸ்பெக்டர் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருக்கு காவல் துறையினரே, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட சமப்வம் மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!
மேலும் படிக்க | வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் - அமித்ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ