உ.பி; பா.ஜ.கவில் இருந்து அடுத்தடுத்து விலகும் அமைச்சர்கள்..!

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் விலகியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 12, 2022, 08:01 PM IST
  • உத்தரப்பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்
  • பா.ஜ.கவில் இருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் விலகல் தொடர்கிறது
  • முக்கிய புள்ளிகள் விலகல் பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உ.பி; பா.ஜ.கவில் இருந்து அடுத்தடுத்து விலகும் அமைச்சர்கள்..! title=

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. அவரது தலைமையிலான அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பா.ஜ.க களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறது.

ALSO READ | தேசிய இளைஞர் தினம்: 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்

இந்தமுறையும் பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார். பா.ஜ.கவுக்கு போட்டியாக சமாஜ்வாடி கட்சி மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அக்கட்சிக்கும் பரவலாக ஆதரவு இருக்கிறது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் பா.ஜ.கவுக்கு பின்னடைவாக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். 

ALSO READ | இதுதான் ஒமிக்ரானின் 3 பெரிய அறிகுறிகள், அலட்சியப்பபடுத்த வேண்டாம்

பா.ஜ.கவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவராக வலம் வந்த சுவாமி பிரசாத் மவுரியா நேற்று பா.ஜ.கவில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து தாரா சிங் சவுகானும், பா.ஜ.கவில் இருந்து இன்று விலகியுள்ளார். ஏற்கனவே விலகியுள்ள பா.ஜ.க எம்.ஏல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் விரைவில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News