அயோத்தி ராமர் கோயில் கர்ப்பகிரகத்திற்கு முதல்வர் யோகி அடிக்கல் நாட்டுகிறார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கோயில் கர்ப்பகிரகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2022, 10:43 AM IST
  • ராமர் கோவில் கட்டும் பணிக்கு ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
  • லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோவில் கட்டுமான பணியில் முக்கிய ஒப்பந்ததாரராக உள்ளது.
  • திட்ட மேலாண்மை ஆலோசகராக டாடா கன்சல்டிங் நிறுவன் பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கர்ப்பகிரகத்திற்கு முதல்வர் யோகி அடிக்கல் நாட்டுகிறார் title=

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை (ஜூன் 1) அயோத்தியில் ராமர் கோவில் கர்ப்பகிரகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் பங்கேற்கும் இந்த ஆன்மீக விழாவில், அயோத்தியை சேர்ந்த 90 சாதுக்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். ராமர் கோவில் கட்டும் பணிக்கு ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, திங்கட்கிழமை, ராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ராமர் கோவில் செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் மற்றும் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா (SRJBTK) தெரிவித்துள்ளது.

கோவில் கட்டுமானம் குறித்த அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட SRJBTK, அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கிய பீடத்தை உயர்த்தும் பணி இன்னும் நடந்து வருவதாகவும் கூறினார். 2023 டிசம்பரில், ராம் லல்லா, அதாவது குழந்தை ராமர் சிலை இருக்கும் கோவிலின் கருவறை வழிபாட்டிற்கு தயாராகிவிடும்.

"கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கிரானைட் கற்களைப் பயன்படுத்தி இந்த பீடம் எழுப்பப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்ட கற்கள் நிறுவும் பணியும் விரைவில் தொடங்கப்படும். ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி-பஹர்பூர் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பிங்க் மணற்கற்களால் இந்த கோவில் கட்டப்படும். மாவட்டத்தில் சுமார் 17,000 கிரானைட் கற்கள் பீடம் வேலைப்பாடுகளில் பயன்படுத்தப்படும்" என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அன்னை சீதா சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கல்

2023 டிசம்பரில், கருவறை மற்றும் ராம் லல்லா சிலை இருக்கும் கோவிலின் கீழ் தளம் வழிபாட்டிற்கு தயாராக இருக்கும் என்றும், ராஜஸ்தானின் மக்ரானா மலைகளில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை பளிங்கு கோவிலில் பயன்படுத்தப்படும் என்றும் அது மேலும் கூறியது. கருவறையில், வேலைப்படுகளுக்காக செதுக்கப்பட்ட பளிங்குகள் அயோத்தியை அடையத் தொடங்கியுள்ளன" என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்

ராமர் கோயிலின் பரிமாணம்--கிழக்கு-மேற்கு திசையில் தரை தளத்தில் நீளம்-380 அடி; வடக்கு- தெற்கு திசையில் தரை தளத்தில் அகலம்-250 அடி; கர்ப்பகிரக தரையில் இருந்து கோபுரத்தின் உயரம்- 181 அடி.

லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கோவில் கட்டுமான பணியில் முக்கிய ஒப்பந்ததாரராக உள்ளது. மேலும் திட்ட மேலாண்மை ஆலோசகராக டாடா கன்சல்டிங் நிறுவன் பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கட்டுமானக் குழு, பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுடன், முன்னாள் ஐஏஎஸ் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் மாதத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் கூட்டம் நடத்தி கட்டுமான பணிகள் குறித்து மிக விரிவாக ஆலோசனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரியில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியின் செயல்முறையை விளக்கும் 3D அனிமேஷன் படத்தை வெளியிட்டது.

டிசம்பர் 2023 முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்யலாம் என்றும், எனினும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 க்குள் கோவில் கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்படும் என்று அறக்கட்டளை மேலும் கூறியது.

மேலும் படிக்க | ராமர் கோவிலுக்கான, பிரம்மாண்டமான மணி ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியை அடைந்தது..!!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News