‘உலகளாவிய அடிப்படை வருமானம்’ சலுகையை அறிவிக்க ரெடியாகும் மோடி அரசு

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, பா.ஜ. கட்சி பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2018, 10:11 AM IST
‘உலகளாவிய அடிப்படை வருமானம்’ சலுகையை அறிவிக்க ரெடியாகும் மோடி அரசு title=

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வி மற்றும் விரைவில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், பல நல்ல திட்டங்களை குறிப்பாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மோடி தலைமையிலனா பாஜக அரசு செயல்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது யுனிவர்சல் அடிப்படை வருவாய் (UBI) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருகிறது. இதுக்குறித்த விவாதம் இன்று அமைச்சரவை கூட்டத்தில் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த திட்டத்தை எப்போது, ​​எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலாம்.

உலகளாவிய அடிப்படை வருமானம் (யுபிஐ) திட்டம் அரசாங்க சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கணக்கிலும் ஒரு நிலையான தொகை வைப்புச் செய்யப்படும். இது அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இரண்டு வருடங்களாக மத்திய அரசாங்கம் இந்த திட்டத்தில் வேலை செய்து வருகிறது. இந்த திட்டத்தில் 20 மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி மந்திரி அருண் ஜேட்லி, பிப்ரவரி 2019ல் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் யுனிவர்சல் அடிப்படை வருமானம் திட்டத்தை அறிவிக்கலாம் எனத்தெரிகிறது.

ஒருவேளை உலகளாவிய அடிப்படை வருமானம் (UBI) நடைமுறைப்படுத்தப்பட்டால், 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன் மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாக இருக்கும். இந்த திட்டம் நாட்டில் சில மாநிலங்களில் விவசாயிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது. 

‘உலகளாவிய அடிப்படை வருமானம்’ என்பது  நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். வருவாய், சமூக நிலைமையை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை நிபந்தனையற்ற ஒரு தொகையை வருமானமாக வழங்கும்.

Trending News